வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

Actor Rajini Jailer Audio Launch: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து விட்டது. தற்போது இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் கலாநிதி மாறன் அவருடைய உரையாடலை தொடங்கி மேடையே அதிரும் படியாக பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதாவது முதலில் நெல்சன், ரஜினியுடன் இணைவதை தெரிந்த பல விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் முழுமையாக ரஜினி மட்டுமே அவரே நம்பி பொறுப்பை ஒப்படைத்தார். அது தற்போது வீணாகவில்லை.

Also read: நீங்க ரொம்ப கருப்பு, ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை.. பின் கண்டிஷன் போட்டு நடித்த ஒரே படம்

எல்லோரும் படத்தை பார்த்து விட்டார்கள் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இப்படத்திற்கு நெல்சன் போட்ட கடின உழைப்பு படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும். அதாவது என்னுடைய தாத்தா ரஜினிகாந்த் படங்களை ஒன்று விடாமல் விரும்பி பார்ப்பாரு. என் அப்பாவும் ரஜினியின் ஸ்டைலுக்காகவே படத்தை பார்ப்பாங்க.என்னைப் பற்றி சொல்லவே தேவையில்லை நான் ரஜினியோட எந்த அளவுக்கு ரசிகன் என்பதை அனைவருக்கும் தெரிந்தது.

அதே மாதிரி என் பொண்ணு என்னை விட ஒரு பங்கு மேலே ரஜினி படம் என்றால் அந்த அளவுக்கு ரசித்துப் பார்ப்பார். மூன்று வயது குழந்தைகள் கூட ரஜினியின் பாடல்கள் வந்தால் அவ்வளவு சுறுசுறுப்பாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஐந்து தலைமுறையாக அவரை கொண்டாடி வருகிறோம். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி இருக்கிறது.அத்துடன் தளபதி விஜய் சொன்ன மாதிரி கண்டிப்பாக போட்டி தொடர்ந்து கொண்டே வருகிறது.

Also read: அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

ஆனால் ரஜினியுடன் போட்டி போடுவதற்கு வேறு யாராலயும் முடியாது. அவரை தான் அவருக்கு போட்டி. அது மட்டுமில்லாமல் சினிமாவிற்கு புதுசாக நடிக்க வரவங்களும் சரி, ஏற்கனவே முன்னணியில் இருப்பவர்களும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள். ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் அவர்கள் எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு தான் சொல்லிக் கொள்கிறேன்.

ரஜினிக்கு தற்போது 72 வயதாகிறது, இப்பொழுதும் இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அதே மாதிரி உங்களுக்கும் 72 வயதில் இதே மாதிரி தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்னு காத்திருந்தால் அப்பொழுது சொல்லுங்கள் ரஜினியின் இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அதுவரை தமிழ்நாட்டில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் என்று ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு பேசி இருக்கிறார்.

Also read: உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்.. கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

Trending News