ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

நெட்பிளிக்ஸ் எடுத்த அதிரடி முடிவு.. திணறிப் போய் நிற்கும் லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள்

Netflix: சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை பார்க்க ஓடிடி தளங்களை பொதுவாக உபயோகித்து வந்தாலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் இதன் பங்கு பெரிய அளவில் அதிகரித்தது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களை, ஊரடங்கு காரணமாக ஓடிடி தளங்களில் பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் ரிலீஸ் செய்ய ஆரம்பித்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

அதன்பின்னர் கடந்த மூன்று வருடங்களாக ஒரு படத்தின் பிசினஸ் என்பது ஓடிடி வியாபாரத்தையும் சேர்ந்தது தான் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த ஓடிடி தளங்கள் டிஜிட்டல் உரிமையை வாங்கி விடுகிறார்கள். இந்த போட்டியில் எப்போதுமே நெட்ப்ளிக்ஸ் தளம் தான் முன்னிலையில் இருக்கிறது.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தற்போது படத்தின் மீது முதலீடு போடுவதே டிஜிட்டல் உரிமை வியாபாரத்தின் மீதான அதீத நம்பிக்கையில் தான். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓ டி டி தளங்கள் அந்த படத்தை வாங்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்குகிறார்கள்.

Also Read:அமீரை தவறாக பேசிய 5 பிரபலங்கள்.. ஞானவேல் ராஜாவுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம்

பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் மற்றும் நல்ல விமர்சனங்களை பெறும் படங்கள், எதிர்பார்ப்பை கிளப்பும் படங்கள் போன்றவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் தான் வாங்கப்படுகின்றது. சமீபத்தில் இந்த நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களை விழி பிதுங்கும் அளவிற்கு செய்திருக்கிறது.

நெட்பிளிக்ஸ் எடுத்த  முடிவு

நெட்பிளிக்ஸ் நிறுவனம் எப்போதுமே மாத தொடக்கத்திலேயே அந்த மாதத்தில் என்னென்ன படங்கள் அந்த நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன என்ற அட்டவணையை வெளியிட்டு விடும். தற்போது இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 2024 வருடம் முழுக்க ரிலீஸ் செய்யும் அளவுக்கு படங்களை புக் செய்து வைத்திருக்கிறதாம். இனி ஒரு வருடத்திற்கு அந்த நிறுவனத்தால் புதிய படங்களை வாங்கவே முடியாதாம்.

பெரும்பாலும் நெட்ப்ளிக்ஸுக்கு படத்தை கொடுத்தால் தான் நல்ல வியாபாரம் கிடைக்குமாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இனி படத்தை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்கள் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தை அணுகவே முடியாத அளவுக்கு 2024 ஆம் வருடம் இருக்கிறதாம். இதனால் லைக்கா மற்றும் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களே என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Also Read:நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

- Advertisement -spot_img

Trending News