சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இந்திய அணியில் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிந்த பின் அணி பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் பெருஞ்சுவர் என்று பெயரெடுத்த ராகுல் டிராவிட். அவர் வந்ததில் இருந்தே அணியில் புது புது மாற்றங்கள் உருவாகி வருகின்றது. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது முதல் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. அதன்பின் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. இந்தத் தொடரில் மூத்த வீரர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவிற்கும், மூத்த சீனியர் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கும் மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வந்ததால் அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் 460 ரன்களை அவர் குவித்திருந்தும் கூட அவருக்கு ஏனோ வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது  தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து ஒரு செய்தியை பி.சி.சி.ஐ அமைப்பின் அதிகாரி ஒருவர் தற்போது பகிர்ந்திருக்கிறார். அதில் “ஷிகர் தவானைச் தேர்வு செய்யாதது மிகப்பெரிய துரதிர்ஷ்டமான முடிவாகும். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த முடிவை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  கன மனதோடு எடுத்துள்ளார். அவர் வருங்கால இந்திய அணியில் இளைஞர்களை வளர்க்கும் விதமாக இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். தவானின் ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும், ராகுல் டிராவிட் செய்தது தவறு என்றும் அவர் தவான் விஷயத்தில் அநியாயம் செய்கிறார் என்றும் புலம்பி வருகின்றனர்.

Trending News