ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம், வைரலாகும் புகைப்படங்கள்.. பல கோடி செலவில் நடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு

Rahul Preet Singh’s wedding, viral photos: பொதுவாக நடிகைகள் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோவுடன் ஜோடி போட்டு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் ராகுல் ப்ரீத் சிங் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதை ஒட்டி திருமணத்திற்கும் தயாராகி விட்டார்.

தமிழில் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமாகிய ரகுல் ப்ரீத் சிங். அடுத்ததாக கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற படங்களில் நடித்து கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அப்படிப்பட்டவர் தற்போது திருமண பந்தத்திற்குள் நுழைய போய்விட்டார். இவர் நடிகர் ஜாக்கி பக்னானியை பல வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய திருமணம் நாளை பிப்ரவரி 21ஆம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற போகிறது. முதலில் இவர்களுடைய திருமணத்தை வெளிநாட்டில் தான் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

Also read: தனுசையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. டைட்டில் காப்பியில் இத்தனை படங்களா?

ஆனால் பல பிரபல நட்சத்திரங்கள் பலருக்கும் அங்கு வருவது வசதியாக இருக்காது என்பதால் கோவாவில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் கடந்த வாரம் முதல் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரபலங்கள் வந்து தங்குவதற்கு பல கோடி செலவு செய்து 5 நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

rahul preeth singh
rahul preeth singh
rahul preeth husband
rahul preeth husband

நேற்று இரவில் ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு ஆடல் பாடல் என கொண்டாட்டத்திற்கு பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருவதால் அதற்கான ஏற்பாடுகளை கோடிக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் பட்டாசுகளை தவிர்த்து, வான வேடிக்கை இல்லாமல் வரும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி உணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மேலும் தன் கல்யாணம் பண்ண போகும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அவர்களுடைய சந்தோஷமான தருணத்தையும் பகிர்ந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவருடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: நாளைய சிவகார்த்திகேயன் என ஆட்டம் போடும் ரெண்டு நடிகர்கள்.. இதுல ஒரே நாள்ல பிறந்தநாள் வேறயா!

Trending News