திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இவருடைய காமெடிக்கு இதுவரை யாரும் வரவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நகைச்சுவையின் மன்னராக இருக்கக்கூடியவர் தான் வைகைப்புயல் வடிவேலு. அத்துடன் இவர் எந்தப் படத்தில் நடிக்கிறாரோ அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று சொல்லும் அளவிற்கு ஹீரோக்களை விட இவரை ரசிப்பதற்காகவே அந்த படத்தை பார்ப்பவர்கள் ஏராளமானவர்.

அப்படிப்பட்ட இவர் சினிமாவில் என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவர் வாய் வைத்து சும்மா இல்லாமல் எதையாவது செய்து பல சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வார். அதனால் தான் 10 வருடங்களாக ரெட் கார்டு கொடுத்து சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு மறுபடியும் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் வந்தார்.

Also read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

இவர் என்னதான் திரும்பி வந்திருந்தாலும் முன் போல் இவருடைய நகைச்சுவை அந்த அளவுக்கு எடுபடவில்லை. தற்போது இவர் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்ட முறையில் நடைபெறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரையும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக அழைத்திருக்கிறார்கள்.

Also read: 2வது முறை மிஸ் பண்ணாமல் கரம் பிடித்த யூடியூப்பர் இர்ஃபான்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

மேலும் அவர்கள் இருவரும் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எதற்காக என்றால் வடிவேலுக்காக மட்டும் தான். அவரை இந்த படத்தின் மூலம் எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு இவர்கள் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இருவரின் படத்திலும் வடிவேலு முக்கிய பங்காக நடித்திருக்கிறார்.

அதற்காக இவர்களால் முடிந்த ஒரு உதவியை செய்ய வேண்டும் என்று மறைமுகமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இவர்கள் வந்தால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கச் செய்யும். அதனால் வடிவேலுக்கு சினிமாவில் மறு திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் இவர்கள் இருக்கிறார்கள். மேலும் கூடுதலாக இசை வெளியீட்டு விழாவில் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

Also read: 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்

Trending News