வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல்- வாணி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக நின்ற ரஜினி.. 45 வருடத்திற்கு பின் ட்ரெண்டாகும் புகைப்படம்

Actor Kamal Marriage Photos: கோலிவுட்டில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல் தான் தற்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். கமல் ஹீரோவாக அறிமுகமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் ரஜினி சிறு வேடத்தில் அறிமுகமானார்.

அதன் தொடர்ச்சியாக கமலுடன் நடித்தால் எளிதில் பிரபலமாகி விடலாம் என அவருடைய பல படங்களிலும் ரஜினி தொடர்ந்து இணைந்தார். அதிலும் 16 வயதினிலே படத்தில் சப்பானியாக கமல் நடித்து எந்த அளவிற்கு பேரும் புகழும் எடுத்தாரோ அதே அளவிற்கு பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினியின் கேரக்டரும் பெரிதாக பேசப்பட்டது.

Also Read: கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. உங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என மேடையில் உருகிய அபிராமி

அதன் பிறகு ரஜினி, கமல் இருவருக்கிடையே தொழில் போட்டி இருந்து வந்தாலும் இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதிலும் 45 வருடத்திற்கு முன்பு கமல் நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக ரஜினி தான் கமலுடன் இருந்திருக்கிறார். அதுவும் மேடையில் மணக்கோலத்தில் இருந்த கமலை ரஜினி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி டிரண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: ரஜினி கமல் ஒரே நாளில் மோதிக்கொண்ட 5 படங்கள்.. இரண்டு படங்களில் மூக்கை உடைத்துக் கொண்ட உலகநாயகன்

பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் கமல் இருவரும் இளம் வயதினராக இருக்கின்றனர். இந்த புகைப்படத்தை சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

கமல்- வாணி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக நின்ற ரஜினி

kamal-marraige-photo-cinemapettai
kamal-marraige-photo-cinemapettai

பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதி- கமல் இருவரும் சுமார் பத்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 1988 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பின் விவாகரத்து பெற்றனர். அதன்பின்பு கமல் 2வது திருமணம் ஆக நடிகை சாரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பல வருடம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Also Read: கமல் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு?. வாரிசு நடிகரை லாக் செய்த உலகநாயகன்

Trending News