புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரூட்டை மாத்தலேனா எல்லாருக்கும் கோவிந்தா.. மொத்தமா கடும் பிரஷரில் இருக்கும் ஜெயிலர் டீம்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தலைவர் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.

ஆனால் சில காலமாக ரஜினியின் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் போய் உள்ளது. ஏனென்றால் முன்பெல்லாம் ரஜினியின் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வசூல் சாதனை படைத்து வந்தது. ஆனால் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also Read :விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

இதனால் தற்போது ரஜினி ஜெயிலர் படத்தை பற்றி யாரும் பெரிய அளவில் பேசவில்லை. மேலும் அந்தப் படத்தைப் பற்றி எந்த அப்டேட் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து தற்போது ரஜினி ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். தனது ரூட்டை மொத்தமாக மாற்றி உள்ளார். இனிமேல் மக்களுக்கு பிடித்தமான காட்சிகளை படத்தில் வைக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சூட்டிங் நடக்கும் இடத்திலும் எல்லோரிடமும் இது நன்றாக இருக்கிறதா என அடிக்கடி கேட்டு வருகிறாராம் ரஜினி. எப்போதுமே கதையில் தலையிடாத ரஜினி இப்போது ஒவ்வொரு விஷயத்தையும் பலமுறை பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

Also Read :கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தோற்றுப் போன ரஜினி.. மூட பழக்கத்தை தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்

ஏனென்றால் தொடர்ந்து ரஜினியின் மார்க்கெட் சரிவை சந்தித்து வருகிறது. மேலும் அவரது சம்பளமும் படத்திற்கு படம் குறைந்து கொண்டே வருகிறது. ஒருவேளை ஜெயிலர் படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றால் சினிமா கேரியரே மொத்தமாக போய்விடும் என்ற பயத்தில் ரஜினி இவ்வாறு செய்து வருகிறாராம்.

இதனால் தற்போது ஓவர் பிரஷரில் ஜெயிலர் டீம் உள்ளதாம். மேலும் சூப்பர் ஸ்டார் இருக்கும் வேகத்தை பார்த்தால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க செய்திடுவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இப்படத்தில் அப்டேட் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read :அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

Trending News