வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னது இத்தனை கேமியோ ரோல் படங்களா.! லால் சலாமுக்கு முன்னாடியே தலைவர் செய்த தரமான சம்பவம்

Rajini Cameo Role Movies: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான லால் சலாம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்திற்கு முன்பே தலைவர் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதை பற்றி இங்கு காண்போம்.

அக்னி சாட்சி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சரிதா நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். அதாவது சரிதா ரஜினியின் ஒரு படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த கேரக்டர் மேல் கோபமாக இருப்பார். அதன் விளைவாக அதில் நடித்த ரஜினியின் வீட்டுக்கே நேரடியாக சென்று சண்டை போடுவது போல் அந்த காட்சி அமைந்திருக்கும்.

தாய் இல்லாமல் நான் இல்லை: ஆர் தியாகராஜன் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்திருப்பார்கள். கமலை காதலிக்கும் ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியேறி விடுவார். ஆனால் கமல் ஸ்ரீதேவியை கடத்தி வந்ததாக நினைத்து ரவுடி பிச்சுவா பக்கிரி சண்டைக்கு செல்வார்.

அந்த கேரக்டரில் தான் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். அதில் ஸ்ரீதேவி, தான் கடத்தப்படவில்லை என்ற உண்மையை சொல்லும்போது அவர் இருவரையும் வாழ்த்தி விட்டு அங்கிருந்து செல்வார். கமலுக்காக ரஜினி இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.

Also read: முதல் நாளே பல் இளிக்கும் தியேட்டர்கள்.. சூடு பிடிக்குமா லால் சலாம்.?

உருவங்கள் மாறலாம்: எஸ் வி ரமணன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் கடவுள் ஒவ்வொரு முறையும் மகேந்திரன் முன்பு தோன்றி நடக்கப் போகும் விஷயங்களை கூறுவார். அதன்படி கடவுள் சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் உருவங்களில் ஒவ்வொரு முறையும் வருவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதில் ரஜினி ஸ்ரீ ராகவேந்திரராக வருவார்.

மனதில் உறுதி வேண்டும்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சுகாசினி நடித்திருக்கும் இப்படத்தில் ரஜினி ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் ஆடி இருப்பார். அதில் ரஜினி மட்டுமல்லாமல் விஜயகாந்த், சத்யராஜ் கூட கௌரவ தோற்றத்தில் வருவார்கள்.

வள்ளி: சூப்பர் ஸ்டார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ப்ரியா ராமன் கதையின் நாயகியாக நடித்திருப்பார். இதில் ரஜினி மனைவியை இழந்து வாடும் வீரய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவருடைய கேரக்டர் கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட கேமியோ கதாபாத்திரமாக இருக்கும்.

Also read: லால் சலாம், லவ்வர் முதல் நாள் கலெக்சன்.. சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட நினைக்கும் ஐஸ்வர்யா

குசேலன்: பி வாசு இயக்கத்தில் உருவான படத்தில் பசுபதி, மீனா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் சூப்பர் ஸ்டார் நடிகர் அசோக் குமாராக நடித்திருப்பார். பசுபதியின் நண்பராக வரும் இவர் கிளைமாக்ஸ் காட்சியில் நட்பை பற்றி பேசும் அந்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

இப்படி நட்பு ரீதியாக சூப்பர் ஸ்டார் பல படங்களில் கௌரவ தோட்டத்தில் நடித்திருக்கிறார். அதில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ரா ஒன் படத்தில் எந்திரன் சிட்டி கதாபாத்திரம் வருவது போல் காட்டப்பட்டு இருக்கும். அது கிராபிக்ஸ் முறையில் செய்யப்பட்டது. ரஜினி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News