சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சிக்னல் காட்டிய ரஜினி, சிட்டாய் பறந்த இயக்குனர்.. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170 வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட சூட்டிங் மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினி 171 வது படத்தின் அறிவிப்பு வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இளம் ஹீரோக்களுக்கு இணையாக அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தன்னுடைய 172 வது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இளம் நடிகர் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார். லோகேஷ் கூட்டணியை விட, இப்போது இந்த கூட்டணி பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் கபாலி படத்திற்கு பிறகு தொடர்ந்து ஒரே இயக்குனருடன் இணைவதை தவிர்த்து வருகிறார். ஆனால் தன்னுடைய 172வது படத்தில் தனக்கு மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்த நெல்சன் உடன் மீண்டும் இணைகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 600 கோடி வரை வசூலையும் செய்து சாதனை படைத்தது.

Also Read:ரெட் ஜெயிண்ட் செய்த தில்லாலங்கடி வேலை.. ரஜினி படத்தை தள்ளி வைக்க கேவலமான பொய்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சனுக்கு சிக்னல் காட்டிவிட்டாராம். பீஸ்ட் படத்தின் மூலம் தன்னுடைய பெயர் சரிவடைந்து கொண்டிருந்த நிலையில், ரஜினியின் படம் தான் நெல்சனை பெரிய ஹீரோவாக தூக்கி விட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ரஜினி கொடுக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண கூடாது என நெல்சன் வேலையில் முழு வீச்சில் இறங்கி விட்டாராம்.

ரஜினி, நெல்சனை ஜெயிலர் 2 படத்திற்கான கதையை டிஸ்கஷன் செய்ய சொல்லி விட்டாராம். இதற்காக ஆபீஸ் கூட தொடங்கி விட்டார்களாம். ரஜினி அடுத்தடுத்து லோகேஷ் மற்றும் ஞானவேல் படத்தில் நடித்து முடிப்பதற்குள் நெல்சன் தன்னுடைய கதையை தேர்ந்தெடுத்து அதற்கான எல்லா வேலையையும் முடித்து ரெடியாகி விடுவார்.

இருந்தாலும் ஒரு ஹிட் படம் கொடுத்த கையோடு அடுத்தடுத்து தன்னுடைய அடுத்த நகர்வுகளை அப்டேட் கொடுத்தால் தான் மக்கள் அந்த நபரை மறக்காமல் இருப்பார்கள். ஆனால் நெல்சன் ரஜினி இரண்டு படங்களை முடித்துக் கொண்டு வரும் வரைக்கும் காத்திருக்க முடிவெடுத்தால், அவுட்டேட் ஆகிவிட அதிக வாய்ப்பிருக்கிறது.

Also Read:73 வயதில் ரஜினிக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. தலைவர் என்னைக்கும் நம்பர் ஒன் என்பது இதுல தெரியுது.!

Trending News