வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது ஓய்வு நேரங்களை பேர குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தான் அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது மகன் பிறந்தார். இவ்வாறு நான்கு பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தோஷமாக விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு படு பிஸியாக உள்ளார். இப்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவராஜ் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read :இதுவரை ரஜினி செய்யாத காரியம்.. சூப்பர் ஸ்டாரான பிறகு முதன்முதலாக சென்னையில் நடக்கும் அதிசயம்

நெல்சன் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியின் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்மையில் ரஜினியை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அப்பாவை வைத்து கண்டிப்பாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஐஸ்வர்யா மிகுந்த ஆர்வமாக உள்ளாராம்.

ஆனால் இதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்காமல் உள்ளாராம். காரணம் சொந்த பந்தங்களை வைத்து ரஜினி இயக்கம் படம் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அதாவது சௌந்தர்யா ரஜினியை வைத்து இயக்கிய கோச்சடையான் படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read :தேவையில்லாமல் சிபிசக்கரவர்த்தி படத்தில் கழுத்தறுக்கும் ரஜினி.. ஆணி புடுங்குறதுல ஒரு நியாயம் வேண்டாமா தலைவரே!

மேலும் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் மாமனாரின் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டிருந்தார். அதேபோல் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியை சந்தித்து நாஷ்டமடைந்தது.

இதனால் உறவுமுறைக்குள் படம் பண்ண ரஜினி தயாராக இல்லை. ஆனால் ஐஸ்வர்யா விடாத குறையாக ரஜினியை தனது படத்தில் கேமியா தோற்றத்திலாவது நடிக்க வைக்க ஆசைப்படுகிறார். ஆனால் தற்போது வரை ரஜினி இதற்கு செவிசாய்க்காமல் உள்ளார்.

Also Read :அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

Trending News