வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இழுத்துக் கொண்டே போகும் ஜெயிலர்.. டென்ஷன் பண்ணும் ரஜினி, குழப்பத்தில் நெல்சன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களும் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இதில் ரஜினிக்காக கௌரவ தோற்றத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை இயக்கி வரும் நெல்சன் சமீப காலமாக ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகிறாராம்.

Also read: சூப்பர் ஸ்டாருக்காக குருவை டீலில் விட்ட லோகேஷ்.. யுனிவர்சில் நடக்கும் அதிரடி திருப்பம்

அதாவது சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசான மாற்றங்களை கூறுகிறாராம். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் வந்த விமர்சனங்களை பார்த்து நெல்சன் மீது அதிருப்தியில் இருக்கும் ரஜினி கதையில் பல திருத்தங்களை கூறி வருகிறார். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், கதையில் அதை மாற்றுங்கள் என்றெல்லாம் கூறி இயக்குனரை ஒரு வழியாக்குகிறாராம்.

அதனால் வேறு வழி இல்லாமல் நெல்சன் அதை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறாராம். அதன் காரணமாகத்தான் இப்போது இப்படத்தில் புதுப்புது ஆர்டிஸ்ட்களும் இணைந்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க படத்திற்கான லொகேஷன்களை தேடியும் பட குழுவினர் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

Also read: வெற்றியின் ரகசியத்தை கத்துக்கொடுத்த ரஜினி.. தனுஷ் 150 கோடி வீடு வாங்கிய ரகசியத்தின் பின்னணி

முதலில் சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு அதனை தொடர்ந்து பாண்டிச்சேரி, கடலூர், மங்களூர் ஆகிய இடங்களுக்கெல்லாம் சென்று இறுதியில் நேபாளத்திலும் ஷூட்டிங் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அடுத்த லொகேஷனுக்கும் பட குழுவினர் பறக்க இருக்கின்றனர். அதனாலேயே ஜெயிலர் படம் இப்போது இழுத்தடித்துக் கொண்டே போகிறதாம்.

ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று செய்திகள் வந்த நிலையில் இப்படி ஒரு குளறுபடியால் ரிலீஸ் தேதி பல மாதங்கள் தள்ளிப் போயிருக்கிறது. ஆனாலும் முத்துவேல் பாண்டியனை திரையில் காண்பதற்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்படுவதற்கான வேலைகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: மீண்டும் பேய் படத்தில் நடிக்கப் போகும் ரஜினி.. சுவாரஸ்யமான தகவலை போட்டு உடைத்த பிரபலம்

Trending News