திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மஞ்சுமல் பாய்ஸ் மொத்த வசூலால் பதறும் ரஜினி, கமல்.. மரண பீதியில் அரண்டு போய் கிடக்கும் இந்தியன் 2, கங்குவா

Manjummel Boys Collection: சோசியல் மீடியாவை திறந்தாலே மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற குணா பாட்டுதான் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து இப்படமும் பாடலும் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு காரணம் தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இதற்கான விதை போட்டது நம் ஆண்டவர் தான். ஆனாலும் அவருக்கே கொஞ்சம் பயத்தை காட்டும் வகையில் இருக்கிறது இப்படத்தின் வசூல் வேட்டை. பொதுவாக மலையாள டப்பிங் படங்கள் தமிழில் வரவேற்பு பெற்றாலும் தியேட்டர்களில் இந்த அளவுக்கு கூட்டம் அலை மோதாது.

டிஜிட்டலுக்கு பழக்கப்பட்டு விட்ட ரசிகர்கள் தரமான மலையாள படங்களை அதிலேயே பார்த்து விடுகிறார்கள். ஆனால் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக ஆடியன்ஸ் கண்டு களிப்பது தமிழ் சினிமாவுக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்றே சொல்லலாம்.

Also read: 7 நாட்களில் இத்தனை கோடியா?. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்

படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடியை தட்டி தூக்கி இருந்த மஞ்சுமல் பாய்ஸ் தற்போது 96 கோடி வரை வசூலித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இப்படம் தாண்டி விடும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரேமம் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இதுவே கோலிவுட் டாப் ஹீரோகளுக்கு கொஞ்சம் பீதியை வரவழைத்திருக்கிறது. ஏனென்றால் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படங்கள் கூட பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதை இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் சரி கட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதேபோல் பிரம்மாண்டம் என்ற பெயரில் ரத்த களரியாக வெளிவரும் படங்களை காட்டிலும் நல்ல கதை தான் ஜெயிக்கும் என்பதையும் மஞ்சுமல் பாய்ஸ் நிரூபித்திருக்கிறது. இதை உணர்ந்து தமிழ் சினிமா சுதாரித்துக்கொண்டால் சரி. இல்லை என்றால் நிலை கொஞ்சம் திண்டாட்டமாக தான் இருக்கும்.

Also read: Manjummel Boys Movie Review- குணா குகையில் சாத்தானிடம் சிக்கிய 11 பேரின் நிலைமை என்னாச்சு? ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அனல் பறக்கும் முழு விமர்சனம்

Trending News