செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வரப்போகுது சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்.. ஏவிஎம்-மை தூக்கிவிட ரஜினி போட்ட பக்கா பிளான்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் தற்போது வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்.

அதற்காக அவர் பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் பல கோடி வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்திற்குப் பிறகு ஏவிஎம் பல திரைப்படங்களை தயாரித்தாலும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் சில காலங்கள் எந்த படத்தையும் தயாரிக்காமல் ஒதுங்கி இருந்தது.

தற்போது ஒரு வெப் தொடர் மூலம் களமிறங்கி இருக்கும் ஏவிஎம் நிறுவனம் சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறது. கதை அனைத்தும் தயாராக இருக்கும் பட்சத்தில் இந்த படம் எப்பொழுது வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படலாம் என்று ஏவிஎம் நிறுவன தயாரிப்பாளர் அருண் குகன் கூறி இருக்கிறார்.

ஆனால் இப்படத்தை இயக்குனர் சங்கர் தான் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். எது எப்படி இருந்தாலும் சிவாஜி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

ரஜினியின் திரைப்பயணத்தில் சிவாஜி படமும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் அவரின் ரசிகர்கள் இந்த படத்தின் மூலம் ரஜினியின் அதிரடி ஆட்டத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News