ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இப்போ வர நடிகர்கள் சம்பாதித்ததை கூட என் நண்பர் கமல் சம்பாதிக்கல.. ரஜினிக்கு உலக நாயகன் கொடுத்த பதிலடி

சினிமாவில் கமல் வந்த பிறகு தான் ரஜினியே என்ட்ரி கொடுத்தார். ஆனால் கமல் சம்பாதித்த பேர் புகழ் பணத்தைவிட டபுள் மடங்காக எல்லாத்தையும் சம்பாதித்தது ரஜினி தான். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு படங்களில் நடித்து வெற்றி பெற்றாலும், கடைசியில் ரஜினி மக்கள் மனதில் ஆழமாக பதிந்து ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முத்திரை பதித்தார்.

ஆனால் கமலின் படங்கள் வித்தியாசமாகவும் அவருடைய நடிப்பு சாதாரணமாகவும் இருக்காது. படத்துக்கு படம் ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் விதமாக எடுப்பதில் கமலை அடிச்சுக்க ஆளே கிடையாது. இவருடைய முக்கிய நோக்கமே படத்தில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதை தவிர பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருக்காது.

Also read: உதயநிதி கூப்பிட்டு வர மறுத்த ரஜினி.. கூட்டணி போட ஒப்புக்கொண்ட கமல்

இதைப்பற்றி ரஜினி ஒரு வீடியோவில் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார். அதாவது இப்ப வருகிற ஆர்டிஸ்ட்களை விட கமல் சம்பாதிக்கும் பணம் மிகவும் கம்மிதான். அத்துடன் சம்பாதித்த பணத்தை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல் கூறியது சம்பாதிக்கிற பணத்தை நான் சினிமாவில் தான் போடுகிறேன் என்று பல பேர் சொல்லி இருந்தாலும் அதை நான் கம்பீரமாகவே செய்வேன். ஏனென்றால் விவசாயி வேற என்ன பண்ணுவான் அவனுக்கு வர லாபத்தை அதில் தான் போட தெரியும். அதே மாதிரி தான் நானும் சினிமாவில் வரும் லாபத்தை சினிமாவில் தான் போடுவேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

Also read: ரஜினியின் கடைசி படம் லோகேஷ் இல்ல.. வேறு இயக்குனரை லாக் செய்த சூப்பர் ஸ்டாரின் போஸ்டர்

அதே மாதிரி நான் 250 ரூபாய் சம்பளம் வாங்கும்போது இதைவிட கொஞ்சம் அதிகமாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்தபடி அதிகமாகவே சம்பளத்தை பெற்றேன். அதை வைத்து சினிமாவில் வேற என்ன வித்தியாசத்தை கொடுக்க முடியும் என்று யோசித்து அதற்கேற்ற வேலையில் தான் என்னுடைய கவனம் இருக்கும் என்று மிகவும் கெத்தாக சொல்லி இருக்கிறார்.

அதே மாதிரி நான் எடுக்கக்கூடிய படங்கள் சக்சஸ் ஆகணும் லாபம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்து எந்தப் படத்தையும் எடுக்கவில்லை. என்னுடைய காலத்திற்குப் பிறகும் நான் எடுக்கும் படங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதை வைத்து தான் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also read: 70 வயதிலும் துவச்சு துவம்சம் பண்ணும் சூப்பர் ஸ்டார்.. ரஜினியின் லைன் அப்பில் இருக்கும் 4 படங்கள்

Trending News