திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

நெல்சனை கடுமையாக எச்சரித்த ரஜினி.. உன் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா.?

Actor Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவு பெறும் நிலையில் ரஜினி அப்பட இயக்குனரை கடுமையாக எச்சரித்ததாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

பிரபலங்களை கொண்டு படம் இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் நெல்சன் தற்பொழுது ரஜினியின் நடிப்பில் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்பட தொடக்கத்திலிருந்து இவர் மேற்கொள்ளும் எஃபெக்ட் ரஜினியையே நெகிழ வைத்துள்ளது.

Also Read: எப்படியோ ஒரு வருடத்தை கழித்த விக்கி-நயன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்

அவ்வாறு பார்க்கையில், படப்பிடிப்பின் போது நெல்சன் சுமார் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே தூங்கியதாக கூறப்பட்ட தகவல் ரஜினியை திடுக்கிட வைத்ததாம்.
இதை மேற்கொண்டு அவரை அழைத்து ஏன் இவ்வாறு செய்கிறாய் எனவும், உன் படத்தில், உன் கதை மீது நம்பிக்கை இல்லையா எனவும் கேட்டு இருக்கிறார்.

படம் வெற்றி பெறுவது எல்லாம் நம் கையில் இல்லை. உன் தரப்பில் செய்ய வேண்டிய வேலைகளை சரிவர செய்தால் மட்டுமே போதும் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்காக இவ்வாறு தூங்காமல் கண் விழித்து வேலை பார்ப்பதெல்லாம் வேலைக்காகாது எனவும் கூறினாராம் ரஜினி.

Also Read: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

இதைக் குறித்து இனி இவ்வாறு நீ செய்வதை நான் கேள்விப்படவே கூடாது எனவும் கடுமையாக கட்டளை இட்டிருக்கிறார். அவ்வாறு ஒரு தந்தை மகனுக்கு கூறும் உபதேசம் போல ரஜினி நெல்சனிடம் நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது. மேலும் படக் குழுவினரிடம் நெல்சனின் இத்தகைய செயலை புகழ்ந்தும் பேசி இருக்கிறார் ரஜினி.

மேலும் வெற்றி தோல்வி எல்லாம் நம் கையில் இல்லை ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. உன் தொழில் மீது உனக்கு இருக்கும் பக்தியை சிறப்பற செய்தால் மட்டுமே போதும் இவ்வாறு உன்னை வற்புறுத்திக் கொள்ள தேவை இல்லை எனவும் நெல்சனுக்கு அறிவுரை கூறினாராம். இத்தகைய சம்பவம் இவரின் அனுபவத்தை குறிக்கிறது.

Also Read: ரஜினிக்கு ஜோடி போட்டு பின் அம்மாவாக நடித்த 5 நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி

Trending News