Rajini and Sivakarthikeyan: பொங்கலை ஒட்டி சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் இரண்டுமே போட்டி போட்டு திரையரங்கங்களுக்கு வெளிவந்தது. அப்படி வந்த இரண்டு படங்களுமே பெருசாக சொல்லும்படி ஆஹா ஓஹோ என்ற விமர்சனத்தை பெறவில்லை. இருந்தாலும் கம்பர் பண்ணி பார்க்கும் பொழுது அயலான் படத்தை விட கேப்டன் மில்லர் படத்திற்கு வசூல் அதிகரித்துவிட்டது.
சினிமாவிற்குள் நுழைந்த பொழுது சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படங்களாக குவிந்தது. ஆனால் தற்போது நான்கு படங்கள் வெளி வந்தால் அதில் ஒரு படம்தான் வெற்றி அடைகிறது. இந்த சூழ்நிலையில் தனுஷை வெறுப்பேத்தும் வகையில் ரஜினி ஒரு காரியத்தில் இறங்கி இருக்கிறார்.
அதாவது அயலான் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை கூப்பிட்டு பாராட்டியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த வகையில் ரஜினி, நான் அயலான் படத்தை பார்த்து மிகவும் வியந்து நிற்கிறேன். எப்படி, இப்படி விதவிதமான படங்களில் நடிக்கிறீர்கள்.
Also read: அயலான் சலார் போன்ற படங்களால் ஹீரோகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. உஷாரான தயாரிப்பாளர்கள்
மக்களுக்கு வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே சிவகார்த்திகேயன் அப்படி எல்லாம் இல்ல சார், நீங்கள் நடித்த எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்கள்தான் எங்களுக்கு மிக உந்துதலாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ரஜினி இந்த விஷயத்தில் எனக்கு நீங்கள் தான் ஒரு முன்னோடி என்று சிவகார்த்திகேயனை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். ரஜினி இப்படி ஒரு பாராட்டு கொடுத்ததற்கு காரணம் தனுசும் சிவகார்த்திகேயனும் போட்டி போடுகிறார்கள் என்று தெரிந்ததினால் தான்.
அந்த வகையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் தற்போது தனுசுக்கு எதிராக சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினி ஒன்னு சேர்ந்து விட்டார்கள். ஆக மொத்தத்தில் இப்பொழுது வரக்கூடிய படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தாண்டி வசூலில் எப்படி கல்லா கட்டலாம் என்பதற்கு ஏற்ற மாதிரி தான் படங்களை கொண்டு வருகிறார்கள்.
Also read: பொங்கல் ரேசில் அயலான், கேப்டன் மில்லர் எது வெற்றிவாகை சூடியது.. குருநாதருடன் மல்லுக்கட்டிய சிஷ்யன்