ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஒரு டேக்கில் நடிப்பதற்கு நான் என்ன கமலா.? இசையமைப்பாளரை வாயடைக்க வைத்த சூப்பர் ஸ்டார்

Super Star Rajini: இப்போது எப்படி தல தளபதிக்கு அடித்துக் கொள்கிறார்களோ, அப்படி தான் 80களில் இருந்து கமல், ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் மோதிக் கொள்வார்கள். ஆனால் ரஜினியை பொறுத்தவரை கமலை எந்த லெவலுக்கு தன்னுடைய மனதில் நினைத்திருக்கிறார் என்பதை பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஸ்ரீனிவாஸ் மூலம் தெரிய வந்துள்ளது.

4 வயதிலிருந்து தமிழ் சினிமாவில் ஊறிக் கிடக்கும் கமலஹாசன் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை சூப்பர் ஸ்டாரை ஒத்துக் கொண்டதுதான் இப்போது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது  பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் தங்கி இருந்த அதே அபார்ட்மெண்டில் தான் ரஜினியும் தங்கி இருந்தாராம்.

Also Read: மணிரத்தினம், கமலால் மறந்து போன நடிகர்.. 25 படங்களில் வில்லனாய் பின்னி பிடல் எடுத்த ஹீரோ

ஏனென்றால் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் ஒரு சில வேலைகள் நடைபெற்றதால் ஸ்ரீனிவாஸ் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டில் அவர் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். அப்போது ஸ்ரீனிவாஸ் தன்னுடைய பிள்ளைகளுடன் ரஜினியை சென்று சந்தித்துள்ளார். சூப்பர் ஸ்டாரிடம் ஸ்ரீனிவாஸ் முள்ளும் மலரும் படத்தில் உங்களுடைய நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்தது.

எப்படி அதை ஒரே டேக்கில் நடித்து முடித்தீர்களா என்று கேட்டார். அதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே, ‘நான் என்ன கமலா! ஒரே டேக்கில் நடித்து முடிப்பதற்கு, கமல் ஒரு நடிகன். நான் ஏதோ எனக்குத் தெரிந்த ஸ்டைலில் படம் நடித்து சம்பாதிப்பதற்காகவே வந்தவன். என்னுடைய படங்களை எடுத்த அற்புதமான இயக்குனர்களால் தான் என்னுடைய நடிப்பை வெளிக் கொணர முடிந்தது.

Also Read: கமலை பேசவிடாமல் குறுக்கிட்டு பேசிய அமிதாப் பச்சன்.. அதிர்ச்சியில் உறைந்த உலகநாயகன்

கமல் அப்படி கிடையாது. ஒரே டேக்கில் எப்பேர்ப்பட்ட சீனையும் நடித்து அசால்ட்டு காட்டுவார். அவர் ரேஞ்சுக்கு என்னால் நடிக்க முடியாது’ என்று ஸ்ரீனிவாசிடம் மிகவும் எதார்த்தமாக பேசியது அவரை மெய்சிலிர்க்க வைத்தது. எந்த ஒரு நடிகனும் தன்னை சமகாலத்து நடிகருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியது கிடையாது.

இவ்வளவு பெருந்தன்மையாக இருப்பதால்தான் ரஜினி இன்றும் சூப்பர் ஸ்டாராகவே தன்னுடைய 72 -வது வயதிலும் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீனிவாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி எவ்வளவு எதார்த்தமானவர் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்.. உலகநாயகன் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா?

Trending News