சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சன் டிவி தலையில் பாரத்தை இறக்கி வைத்த ரஜினி.. வேண்டா வெறுப்பாய் ஒப்புக்கொண்ட கலாநிதி

Kalanithi Maran – Rajini : ஜெயிலர் படம் கொடுத்த மிகப்பெரிய வசூலால் கலாநிதி மற்றும் ரஜினி இடையே ஒரு நல்ல உறவு போய்க் கொண்டிருக்கிறது. இதனால் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கம் அடுத்த படத்தையும் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்க இருக்கிறார்.

ஆனால் இப்போது ரஜினி கலாநிதியின் தலையில் ஒரு பாரத்தை இறக்கி வைத்து விட்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் 3 படத்தின் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா அறிமுகமான நிலையில் அதன் பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார். இவரது படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற வில்லை. இதனால் இப்போது லால் சலாம் படத்தின் சாட்டிலைட் உரிமம் தற்போது வரை விலை போகாமல் உள்ளது.

Also Read : ரஜினியை காப்பி அடித்து அசிங்கப்பட்ட தனுஷ்.. புலியை பார்த்து சூடு போட்டு மாட்டிக்கொண்ட அவலம்

இதனால் ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி தள்ளி போன நிலையில் இப்போது பிப்ரவரி ஒன்பதாம் தேதியை லாக் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காரணம் ரஜினி நேரடியாகவே கலாநிதிக்கு ஃபோன் செய்து இந்த படத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். இப்போது லால் சலாம் படத்தை வாங்கவில்லை என்றால் அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

அதாவது அடுத்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொள்வாரோ என்ற பயத்தில் வேண்டாம் வெறுப்பாய் இப்போது லால் சலாம் படத்தை சன் டிவி வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும் ரஜினியால் கண்டிப்பாக லால் சலாம் படம் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

Also Read : 47 வயதில் ரஜினியுடன் மல்லு கட்டிய கவர்ச்சி கன்னி.. காவாலாவுக்கு அப்போதே டஃப் கொடுத்த ஐட்டம் டான்சர்

Trending News