Actor Rajinikanth: ரஜினியை பொறுத்தவரை யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதனால் தான் நெல்சன் புது இயக்குனராக இருந்தாலும் பரவாயில்லை, தோல்வி படங்கள் கொடுத்திருந்தாலும் கவலையில்லை, வயது கம்மியாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவருடைய படத்தில் மூத்த முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்றால் அவருக்கு எப்பேர்பட்ட வரவேற்பையும், கௌரவத்தையும் கொடுத்திருக்கிறார் என்று நாம் இப்பொழுது பார்க்கலாம். அதாவது நடிப்புக்கு இலக்கணமாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து மக்களிடம் நடிகர் திலகம் என்று பட்டத்தை வாங்கி தற்போது வரை நிலைத்து நிற்பவர் தான் சிவாஜி கணேசன்.
அப்படிப்பட்ட இவர் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்து கடைசியாக வாங்கிய சம்பளம் 6 லட்ச ரூபாய். அதன் பின் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கேரக்டரிலும், அப்பா கதாபாத்திரத்தையும் எடுத்து நடித்து வந்தார். அப்படி இவர் நடித்த படங்களில் விஜய் உடன் ஒன்ஸ்மோர் படத்துக்காக 10 இலட்ச ரூபாய் சம்பளத்தை பெற்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கமலுக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது தேவர் மகன் தான். அந்தப் படத்தில் கமலின் அப்பாவாக பெரிய தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 20 லட்சம் ரூபாய். இப்படம் கமலின் நடிப்புக்கும், சிவாஜியின் எதார்த்தத்திற்கும் பெயர் போனதால் மாபெரும் வெற்றி அடைந்து மக்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டது.
Also read: 90களில் அதிக செல்வாக்குடன் இருந்த 8 ஹீரோக்கள்.. கமலை தாண்டி சிவாஜிக்கு போட்டி ரஜினி மட்டுமே
அடுத்ததாக விஜய் மற்றும் கமலுடன் நடித்த இவர் ரஜினியுடன் நடிக்காமல் இருந்தால் வரலாறு முழுமை அடையாது என்பதற்காகவே கிடைத்த வாய்ப்பை சிவாஜி நன்றாக பயன்படுத்தினார். அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் அப்பா கேரக்டரை சிவாஜி நடித்து கொடுத்தார்.
அப்படி இவர் படையப்பா படத்தில் நடிக்க சம்மதம் கொடுத்ததால், இதுவரை அவர் வாங்காத சம்பளத்தையும், கமல் கொடுத்த சம்பளத்தை விட ஐந்து மடங்காகவும் இருக்க வேண்டும் என்று ரஜினி, சிவாஜிக்கு 1கோடி சம்பளத்தை கொடுத்திருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சிவாஜி அப்படியே வியந்து பார்த்து இதுதான் என் வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய முதல் படம் என்று ரஜினியிடம் சொல்லி பூரித்து போய் நின்று இருக்கிறார்.
Also read: 90களில் அதிக செல்வாக்குடன் இருந்த 8 ஹீரோக்கள்.. கமலை தாண்டி சிவாஜிக்கு போட்டி ரஜினி மட்டுமே