சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

கடந்த சில நாட்களாகவே சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் சலசலக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் 30 ம் தேதி வெளிவர இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்திற்காக முதலில் சூப்பர் ஸ்டாரை தான் அணுகியதாக தெரிவித்துள்ளார். இப்படம் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.

Also read: பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

அந்த வகையில் படக்குழுவினர் ரஜினியிடம் முதலில் அதை போட்டு காண்பித்து இருக்கின்றனர். படத்தை பார்த்த சூப்பர் ஸ்டாரும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் ரீமேக் படம் என்பதால் நடிப்பதற்கு சில தயக்கம் காட்டி இருக்கிறார். அதன் பிறகு தான் பட குழுவினர் சிம்புவை அணுகி இந்த கதையை பற்றி கூறியிருக்கின்றனர்.

அவரும் இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்படி தான் பத்து தல திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் ஞானவேல் ராஜா இந்த கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் அல்லது சிம்பு இருவரில் ஒருவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம். அதன்படி சிம்புவே இப்படத்தில் நடித்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Also read: நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

அந்த வகையில் இப்படத்தில் நடிப்பதற்காக படக்குழு ரஜினியை அணுகி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. ஒருவேளை அவர் இதில் நடிக்க சம்மதித்திருந்தால் வேற லெவலில் இப்படம் மாஸ் காட்டி இருக்கும் எனவும் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். முதலில் சிம்பு இப்படத்தில் கெஸ்ட் ரோலில் தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் பிறகு அவருடைய காட்சிகள் அதிகரிக்கப்பட்டு ஏ ஆர் ரகுமானும் இப்படத்தில் கைகோர்த்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியது. இதில் சூப்பர் ஸ்டாரும் படத்தை பார்த்து ரசித்தார் என்று வெளியாகி உள்ள தகவல் படத்திற்கான பிரமோஷனாக அமைந்துள்ளது. இப்படித்தான் பத்து தல படத்தில் சிம்புவின் என்ட்ரி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

Trending News