ரஜினியை அலற விடப்போகும் ஜெய்.. நெல்சன் கொடுத்த புதிய தைரியம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் ஜெய் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகர் ஜெய், சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நிலையில், சில வருடங்களாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் இடம்பெறவில்லை. இதனிடையே ஜெய், தமிழ் சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், திடீரென இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: சிவகார்த்திகேயனுக்காக கெஞ்சிய நெல்சன்.. விடாப்பிடியாக மறுத்த ரஜினிகாந்த்

இந்நிலையில் நடிகர் ஜெய், தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெய் எப்படி கமிட்டானார் என்ற செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குனர் நெல்சனின் முதல் திரைப்படமான வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு வில்லனாக ஜெய் கமிட்டாகி இருந்தார்.

ஆனால் இத்திரைப்படம் பாதியிலேயே நின்ற நிலையில் நடிகர் ஜெய்யை எப்படியாவது தான் இயக்கும் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனர் நெல்சன் முடிவு செய்துள்ளாராம். இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் ஜெய் நடிப்பார் என்றும் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Also Read: ரஜினி பட டைட்டிலை வைத்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வேற லெவலில் இருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

இந்நிலையில் நடிகர் ஜெய் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி திரைப்படத்தில் இயக்குனர் சுந்தர்.சியுடன் இணைந்து ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நிலையில், அவரது நடிப்பை ஜெயிலர் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அளவிற்கு ஜெய்யின் மார்க்கெட் உயர்ந்துள்ளதா என பல விமர்சகர்களும், கோலிவுட் வட்டாரத்திலும் ஜெய்யை விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் நடிகர் ஜெய்யின் விடா முயற்சி அவருக்கு கைகூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: தொடர்ந்து ஏமாற்றும் தலைவர்.. நீங்களா புரிஞ்சுகிட்டா அவர் என்ன பண்ணுவாரு