திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஆமை போல் வேலை செய்யும் நெல்சன்.. ஒரு வருடமாக 4 பேரை உள்ளே கொண்டு வந்த சூப்பர் ஸ்டார்

இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அவருடைய அடுத்த படமான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதனால் அடுத்தடுத்து தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நெல்சன் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றிய பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் அடுத்த படத்தின் அப்டேட் ஆனது வெளியானது. அதாவது கிட்டதட்ட கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. படத்தின் வேலைகள் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.

Also Read: ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்றுவரை படத்தில் ஒவ்வொரு கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் சேர்க்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். எப்போதுமே ஒரு படம் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே அத்தனை கேரக்டர்களும் அப்டேட் ஆகிவிடும். ஆனால் ஜெயிலர் திரைப்படத்தில் இதுபோன்ற முன் திட்டமிடல் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த 2022 நவம்பரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் இந்த படத்தில் இணைவதாக அப்டேட் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வருடத்தில் மோகன்லால் மற்றும் சுனில் ஜெயிலர் திரைப்படத்தில் இணைகிறார்கள் என்று அப்டேட் வெளியானது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்த படத்தில் இணைவதாக புதிய அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது.

Also Read: ரஜினி மாஸ் படத்திற்கு ரீமேக் செய்ய வாய்ப்பே இல்ல.. கிடுக்கு புடி போட்ட தயாரிப்பாளர்

அதாவது கிட்டதட்ட ஒரு வருடமாக புதுப்புது ஆர்டிஸ்ட்களை படத்தில் சேர்த்துக் கொண்டே போகிறார்கள் என்றால் அந்தப் படத்தின் கதையை இன்று வரை உறுதிப்படுத்தாமல் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இதன் மூலம் மொத்தத்தில் நெல்சன் சொன்ன கதையே இப்போது ஜெயிலர் படத்தின் கதையாக இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

முதலில் நெல்சனை நம்பி களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த படத்தின் கதையில் அதிகமாக தலையிடுவது தான் இந்த கேரக்டர்கள் ஒன்று ஒன்றாக சேருவதற்கு காரணம். நெல்சன் கதையில் நம்பிக்கை இல்லாமல் போன ரஜினிகாந்த் அடுத்தடுத்து நிறைய மாற்றங்களை இந்த கதையில் ஏற்படுத்தி வருவது போல் தெரிகிறது.

Also Read: ரஜினி, கமல் விரும்பிய நடிகையை அசால்டாக தூக்கிய ஹீரோ.. பலான விஷயம் தெரிந்து எஸ்கேப்பான ஹீரோயின்

Trending News