திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாலத்தீவில் ரஜினி போட்ட சீக்ரெட் மீட்டிங்.. மொத்த நிம்மதிக்கும் உலைவைக்கும் குடும்பம்

Super Star Rajini: தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தை நடித்து முடித்துவிட்டு மாலத்தீவுக்கு வெக்கேஷன் சென்றிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினி அங்கு ஜாலியாக இருப்பதற்கு செல்லவில்லை சீக்ரட்டாக ஒரு மீட்டிங் நடத்துவதற்கு தான் போயிருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற இருக்கிறது. மொத்த பாரத்தையும் ஆண்டவன் மேல் போட்டு ரஜினி மாலத்தீவு சென்று பின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மீண்டும் சென்னை திரும்பினார்.

Also Read: 40 வயதில் பாலிவுட் கேரியரை தொடங்கிய 5 நடிகைகள்.. கபூர் குடும்பத்தின் மருமகளாக கலக்கிய ஸ்ரீதேவி

மாலத்தீவு சென்ற ரஜினிக்கு அங்கே நிம்மதி இல்லாத பொழப்பு தானாம். இப்பொழுது சென்னை திரும்பி உள்ளார். அவர் குடும்பம் அவருக்கு மேலும் மேலும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது. குடும்பத்தில் அவருடைய மகளால் ரஜினிக்கு நிம்மதி இல்லாமல் இருக்கிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். தனுஷ் அடுத்தடுத்த படங்களில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோலதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: நான் செத்தா நீ வருவியா.? ஹீரோவிடம் கேட்ட சில்க், 2 நாளில் பலித்த விபரீத ஆசையை நிறைவேற்றிய நடிகர்

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பதற்காக ரஜினி மாலத்தீவில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இரண்டு மகன்களுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினி நினைக்கிறார்.

ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ரொம்ப பிசியாக இருக்கிறார்கள். அதனால் ரஜினி சொன்னபடி மாலத்தீவுக்கு இருவரும் செல்லவில்லை. ஆக ரஜினி போட்ட பிளான் எல்லாம் சொதப்பியது. சென்னை வந்ததால் இப்பொழுது திரும்பவும் ரஜினிக்கு பிரச்சனை தான்.

Also Read: 15 வினாடியில் மாயமான ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டுகள்.. சன் பிக்சர்ஸை நம்பாமல் தலைவராக ரஜினி செய்யும் வேலை

Trending News