சூப்பர் ஸ்டார் ரஜினி சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாகவே ரஜினி ரிலீஸ் ஆகும் படங்களை பார்த்து விட்டு அந்த படம் சம்மந்தப்பட்டவர்களை தொலைபேசியில் அழைத்து பேசி வாழ்த்து சொல்லி வருகிறார். ஒரு சிலரை நேரில் கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். சிலருக்கு வாய்ப்புகளும் கொடுத்து இருக்கிறார்.
Also Read : அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். மேலும் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரியங்கா மோகன், SJ சூர்யா, சூரி நடித்த டான் படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிபியை அழைத்து பாராட்டியிருக்கிறார்.
Also Read : பா ரஞ்சித்தை பாராட்டும் சாக்கில் ரஜினி செய்த தந்திரம்.. இது சாத்தியமா என குழப்பத்தில் கோலிவுட்
சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், லைகா புரோடக்சனில் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து சினிமா வட்டாரங்கள் சிபியிடம் இதையெல்லாம் நம்ப வேண்டாம் எனவும் இதுபோலவே பலரும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
ரஜினி ஏற்கனவே ரஞ்சித்தின் படங்களை பார்த்துவிட்டு காலா, கபாலி என்னும் அடுத்தடுத்து இரண்டு படங்களை பண்ணியிருந்தார். கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பேட்டை படத்தில் பணியாற்றினார். இப்போது நெல்சனுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : 890 நாட்கள் ஓடிய ரஜினியின் ஒரே படம்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாதனை