சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் நிறைய நிறைய முக்கியமான கதாபாத்திரங்களுடன் நடித்திருக்கிறார். சிவாஜி, நாகேஷ், நம்பியார், ரவிச்சந்திரன், போன்றோருடன் நடித்த ரஜினிகாந்த் ஒரு முக்கியமான லெஜெண்ட் உடன் இதுவரை நடிக்கவே இல்லை.
திரைத்துறையில் கமலஹாசனுக்கு காமெடி திரைப்படம் எப்போதுமே கைகொடுத்திருக்கிறது. இதுபோன்ற காமெடி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும்போது கமலும் அந்த திரைக்கதை ஆசிரியர்களுடன் பணியாற்றுவார். அப்படி ஒரு திரைக்கதை ஆசிரியர் தான் நமக்கு எல்லாம் நன்றாக தெரிந்த கிரேசி மோகன்.
இந்த வரிசையில் கமலுக்கு மற்றும் ஒரு நண்பரும் உண்டு, அவர்தான் மௌலி ஒரு சிறந்த மேடை நடிகர், சினிமா நடிகர், கதை ஆசிரியர் என அத்தனை துறையிலும் அசத்தியவர். தமிழில் நளதமயந்தி மற்றும் பம்மல் கே சம்பந்தம் என்னும் இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். இதில் நளதமயந்தி படத்தை கமலஹாசன் தயாரித்தார், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார்.
மௌலி பல தமிழ் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கோலிவுட்டில் மௌலி நிறைய நல்ல குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் பல படங்களில் இவர்தான் காமெடி டிராக்குகளை எழுதியிருக்கிறார். இதன் மூலம்தான் கமலுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது என்று சொல்லலாம்.
பல குணசித்திர வேடங்களில் இவர் நடித்திருந்தாலும், நகைச்சுவைக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் மேலும் இவருடைய திரைக்கதைக்காக பல விருதுகளையும் இவர் வாங்கியிருக்கிறார்.
இப்படி சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த மௌலி பிறகு சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பை தொடங்கினார் நாதஸ்வரம் குலதெய்வம் கோலங்கள் கலசம் கல்யாண வீடு போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.