Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடுத்த வருடம் ஹாட்ரிக் வெற்றிக்கு உறுதி செய்யும் ரஜினியின் 3 படங்கள்.. மொத்தமா ஒரு ஆயிரம் கோடி வசூல் பார்சல்

அடுத்த வருடம் ஹாட்ரிக் வெற்றிக்கு உறுதி செய்யும் ரஜினியின் 3 படங்கள்.. மொத்தமா ஒரு ஆயிரம் கோடி வசூல் பார்சல்

ரஜினி பொதுவாக கடந்த பல வருடங்களாகவே வருஷத்திற்கு ஒரு படம் என செலக்ட் செய்து நடித்து வந்தார்.

Rajinikanth Upcoming Movies: ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு ஒரு புதிய தெம்பை கொடுத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவுமே இல்லாத ரஜினியின் சினிமா கேரியரில், இந்த படம் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியதோடு, வசூலிலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 650 கோடியை நெருங்கி விட்டதாக சமீபத்திய தகவல்கள் சொல்கின்றன.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது ரஜினி தேர்ந்தெடுத்த கதைக்களம் தான். வழக்கம் போல தன்னுடைய மாஸ், கிளாஸ் என எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், நெல்சன் சொன்னதை அப்படியே நடித்ததால் தான் ரஜினிக்கு இந்த படம் சொதப்பாமல், ஹிட்டாகி இருக்கிறது. ஒரு இயக்குனரின் படமாக நெல்சனுக்கும் இது வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

ரஜினி பொதுவாக கடந்த பல வருடங்களாகவே வருஷத்திற்கு ஒரு படம் என செலக்ட் செய்து நடித்து வந்தார். ஆனால் ஜெயிலர் படத்திற்குப் பிறகு இது எல்லாமே தலைகீழாக மாறி இருக்கிறது. ஜெயிலர் படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே லால் சலாம் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்தார். அதேபோன்று அந்த சமயத்திலேயே அடுத்தடுத்து இவருடைய படம் அப்டேட்டுகள் வெளியாகின. தற்போது அடுத்த வருடம் ரிலீஸ் ஆக ரஜினிக்கு மூன்று படங்கள் காத்திருக்கின்றன.

லால் சலாம்: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். மகளின் வெற்றிக்காக ரஜினி அவர் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருட ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டிருக்கிறது.

தலைவர் 170: ரஜினி அடுத்து நடிக்க இருக்கும் படம் தான் தலைவர் 170. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். லாக்கப் மரணங்களை மையப்படுத்தி படத்தின் கதை எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ரஜினி முப்பதிலிருந்து, 50 நாட்கள் கால் சீட் கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தலைவர் 171: ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டணி தான் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறது. படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்கு பட குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.