செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிலர் வெற்றியால் பரபரப்பாகும் ரஜினியின் கால்ஷீட்.. 2024 பிப்ரவரிக்குள் 2 படத்தை ரிலீஸ் பண்ண போட்ட பிளான்

Actor Rajini: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பும் படம் தான் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மக்களால் கொண்டாடப்படும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டு அடுத்த கட்ட படங்களில் களம் இறங்கும் ரஜினியின் கால்ஷீட் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

பல பிரபலங்களின் சேர்க்கையால் ஜெயிலர் படம் வெற்றி பெற்றது என்ற பேச்சு எழுந்தாலும், தலைவரின் உன்னதமான நடிப்பே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் வசூலில் பட்டைய கிளப்பும் இப்படத்தின் அப்டேட் குறித்து அறியாது இமயமலையில் தஞ்சம் புகுந்து வருகிறார் ரஜினி.

Also Read: மிருகமாய் மாறி வேட்டையாட நினைக்கும் குணசேகரன்.. சைக்கோவிடம் சிக்க போகும் ஜீவானந்தம்

அவ்வாறு இருக்க, மக்களால் கொண்டாடப்படும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி மேற்கொள்ள போகும் படங்களுக்கு புது ப்ளான் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இமயமலையில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி திரும்பிய பின், இரு படங்களை மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

இவ்விரண்டு படங்களும் 2024ல் ரிலீஸ் ஆக பக்கா பிளான் போட்டு வருவதாகவும் பேச்சு அடிபட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் செம குஷியில் இருந்து வரும் ரஜினி. இப்படத்தின் வெற்றினை கொண்டு சூட்டோடு சூட்டாக 2 படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

Also Read: கமல், அம்பிகா காம்போவில் பட்டைய கிளப்பிய 5 படங்கள்.. பிளாக் பஸ்டர் ஹிட் கண்ட சகலகலா வல்லவன்

டிஜே ஞானவேல் படமும் மற்றும் லோகேஷ் கனகராஜ் படத்தையும் பிப்ரவரி 2024 குள் முடிக்க திட்டம் தீட்டி வருகிறாராம். இது எப்படி சாத்தியமாகும் என்று பார்த்தால், இவர் கால்ஷீட் கொடுக்கும்போது இதற்கான நாட்களையும் முடிவு செய்துவிட்டாராம். டிஜே ஞானவேல் படத்திற்கு வெறும் 38 நாட்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இருக்கு நவம்பர் 14ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கவும் அவற்றை பிப்ரவரிக்குள் முடித்து விட வேண்டும் எனவும் கெடுபிடி போட்டு இருக்கிறாராம். அவ்வாறு அடுத்தடுத்த படங்களை மேற்கொள்ள திட்டம் தீட்டி பக்காவாய் காய் நகர்த்தி வருகிறார் ரஜினி என சினிமா வட்டாரங்கள் இடையே பேச்சுக்கள் எழ தொடங்கி விட்டது.

Also Read: சன்னியாசியா போனாலும் சக்க போடு போடும் ஜெயிலர்.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

Trending News