புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிரம்மாண்டத்தின் உச்சம் தொட போகும் ஜெயிலர்.. பெரிய தலைகளுக்கு கொக்கி போடும் நெல்சன்

நெல்சன் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தால் பெருத்த அடி வாங்கி இருந்தார். இதனால் ரஜினியின் பட வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் அப்போது நிலவியது. ஆனால் சூப்பர் ஸ்டார் கொடுத்த வாக்கில் இருந்து பின்வாங்க மாட்டார் என்பதால் நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதற்காகவே இரவு, பகல் பாராமல் நெல்சன் கடுமையாக ஜெயிலர் படத்திற்கு உழைத்து வந்தார். அதன் விளைவாக சமீபத்தில் ரிலீஸ் தேதியுடன் வெளியான வீடியோ ரசிகர்களை அசர வைத்தது. ரஜினி இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக காட்சியளித்தது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

Also Read : மும்பையில் இருந்து கடும் கோபத்தில் வந்த ரஜினி.. மகளின் குளறுபடியால் நிம்மதி தொலைந்தது

மேலும் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக படக்குழு ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜூலை மாதம் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக ஜெயிலர் ஆடியோ லான்ச் பங்க்ஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு கோலிவுட் சினிமாவே வாயை பிளக்கும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற முனைப்பில் நெல்சன் செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு ஒருபடி மேலாகவே ஜெயிலர் பட விழா இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : 1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

மேலும் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரை கொண்டுவர பெரிய தலைகளுக்கு கொக்கி போட்டுள்ளனர். ரஜினி பட நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை பான் இந்தியன் ஸ்டார்களை வரவழைக்க போரார்களாம்.

அதாவது அனைத்து மொழிகளிலும் பரிச்சயமான நபர்களை ஜெயிலர் பட விழாவுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அனிருத் இந்த படத்திற்காக தரமான பாடல்கள் இறக்கியுள்ளார். ஆகையால் இப்போது இதற்கான முன்னேற்பாடுகளை நெல்சன் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறாராம். ஜெயிலர் படத்தை பற்றிய இன்னும் சில அப்டேட்டுகள் விரைவில் வர இருக்கிறது.

Also Read : விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்

Trending News