வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கடைசி வரை ஏமாற்றிய பாரதிராஜா

காலத்தால் அழியாத படங்களில் ஒன்று தான் பாரதிராஜாவின் 16 வயதினிலே. சப்பாணி, மயில், பரட்டை என்ற கதாபாத்திரங்களை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. கமலின் அந்த வித்தியாசமான சப்பாணி கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமாவில் வேறு இடத்திற்கு கொண்டு சென்றது.

அதேபோல தான் ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரமும் பலராலும் ஈர்க்கப்பட்டது. இந்த படத்தில் ஸ்ரீதேவியை அடையத் துடிக்கும் வில்லனாக பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு அவருடைய முடி, பார்வை எல்லாம் பக்காவாக பொருந்தியது.

Also Read : பிரியாமணியால் பாரதிராஜாவிற்கு ஏற்பட்ட சறுக்கல்.. மீண்டும் எந்திரிக்கவே முடியாமல் விழுந்த அடி

இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. யாராவது சப்பானின்னு கூப்பிட்டா சப்புனு அற என்று மயில் கூறுவதாக இருக்கட்டும், இது எப்படி இருக்கு என்று பரட்டையின் வசனமும் தியேட்டரில் கைதட்டல் பறந்தது.

ரஜினிக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது அப்போது இயக்குனர் பாரதிராஜாவின் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் தான். இந்நிலையில் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி 16 வயதினிலே படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

Also Read : கமல் மட்டும்தான் காமெடியில் கலக்குவாரா.? ரஜினி சக்சஸ் கொடுத்த 6 முழு நீள நகைச்சுவை படங்கள்

அதாவது 16 வயதினிலே படத்திற்கு கமலஹாசன் 27 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவிக்கு 9000 சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க முதலில் 3000 சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

ஆனால் கடைசியில் பாரதிராஜா 2500 ரூபாய் தான் சம்பளம் கொடுத்துள்ளார். இன்று வரை பல மேடைகளில் பேசும்போது ரஜினி பாரதிராஜா இன்னும் அந்த 500 ரூபாய் பாக்கி கொடுக்கவில்லை என்று நக்கலாக சொல்லிக் காண்பிப்பார். ரஜினி இப்போது மிகப் பெரிய உயரத்தை அடைய 16 வயதினிலே படத்தைப் போல பல படங்கள் காரணமாக இருந்தது.

Also Read : அண்ணாத்த பட தோல்விக்கு ரஜினியோ, சிவாவோ காரணம் இல்ல.. இவங்களால தான் மொத்தமா போச்சு

Trending News