புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சோகமாக முடிந்த 5 படங்கள்.. தியேட்டரில் கடைசி வரை ஏங்க வைத்த ராம்-ஜானு

பொதுவாக சினிமாவில் முடிவு என்பது கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் தான் இருக்கும் அரிதிலும் அரிதாகத் தான் சில திரைப்படங்கள், இப்படி முடிஞ்சிருக்க கூடாது என நம்மை புலம்ப வைக்கும் அளவுக்கு இருக்கும். அப்படி படம் பார்க்கும் ரசிகர்களை வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு சோகமாக முடிந்த சில திரைப்படங்களும் இருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

ஷாஜகான்: ரவி இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஜய், ரிச்சா ஆகியோர் நடித்திருப்பார்கள். முக்கோண காதல் கதையாக உருவான இப்படத்தில் விஜய் ஹீரோயின் ரிச்சாவை உருகி உருகி காதலிப்பார். ஆனாலும் தன் காதலை அவர் வெளிக்காட்ட மாட்டார். அந்த கேப்பில் செகண்ட் ஹீரோவும், ஹீரோயினும் காதலிப்பார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால் விஜய் தான் இந்த காதல் சேர்வதற்கு உதவியாக இருப்பார். தன் காதலி என்று தெரியாமலேயே அவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்தும் போட வருவார். அப்போதுதான் இந்த உண்மை அவருக்கு தெரியவரும். தன் காதலியை மணக்கோலத்தில் பார்த்தால் யாருக்கு தான் துக்கம் வராது. அதை அப்படியே விஜய் வெளிக்காட்டி இருப்பார். இப்படியாக முடிந்த அந்த படத்தில் விஜய் ஹீரோயின் உடன் சேரவில்லையே என ரசிகர்களும் ஆதங்கப்பட்டு தான் போனார்கள்.

Also read: தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

காதல்: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் ஹீரோ பணக்கார பெண்ணை காதலிப்பது போல் இப்படம் அமைந்திருக்கும். வீட்டை விட்டு ஓடி வரும் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் வில்லனின் சதியால் பிரிக்கப்படுவார்கள்.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தியா, பரத் உயிரை காப்பாற்றுவதற்காக தன் தாலியை கழட்டி தூக்கி எறிவார். இப்படி செல்லும் அந்த கதையின் இறுதியில் அவர் பரத்தை பைத்தியமாக நடுரோட்டில் பார்த்து விட்டு தாங்க முடியாமல் கதறுவார். அந்த காட்சி படம் பார்த்த அத்தனை பேரையும் கலங்கடித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இது ஒரு உண்மை சம்பவம் என்பது பலரையும் வேதனை கொள்ள செய்தது. இப்படிப்பட்ட முடிவுடன் வெளியான அந்த படம் சக்கை போடு போட்டது.

Also read: தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த 8 வெள்ளக்கார துரைகள்.. நோக்கு வர்மத்தால் மிரளவிட்ட டாங்கிலி

3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. பள்ளி பருவத்திலேயே காதலிக்கும் ஹீரோ ஹீரோயின் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வார்கள். ஆனால் உளவியல் பிரச்சினை காரணமாக பாதிக்கப்படும் தனுஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவார்.

அந்த காட்சியில் அவருடைய நடிப்பு அபாரமாக இருக்கும். அதிலும் அவருடைய இழப்பை தாங்க முடியாமல் சுருதிஹாசன் கத்தி கதறும் காட்சி நமக்கே கண்ணீரை வரவழைக்கும். இப்படி ஒரு சோகமான முடிவுடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த இருவரையும் வாழ வைத்திருக்கலாமே என ரசிகர்கள் ஆதங்கத்துடன் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also read: அதிக நேரம் ஓடியதால் டெபாசிட் இழந்த 5 படங்கள்.. 4 மணி நேரம் கொலையாய் கொன்ற படம்

பரதேசி: பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. பணக்கஷ்டத்திற்காக வேலைக்கு வருபவர்களை கொத்தடிமைகளாக மாற்றி அவர்களுடைய உழைப்பை உறிஞ்சும் கதை தான் இப்படம். இதில் தன் காதலிக்காக அதர்வா வேறு இடத்திற்கு வேலைக்கு செல்வார்.

ஆனால் அந்த கும்பலில் இருந்து மீள முடியாதபடி அவர் சிக்கிக் கொள்வார். அதற்கிடையில் அதர்வாவுக்காக காத்திருக்கும் வேதிகாவுக்கு குழந்தையும் பிறந்துவிடும். ஆனாலும் அவர் வராததால் குழந்தையை தூக்கிக் கொண்டு அவர் அதே இடத்திற்கு வேலைக்கு வருவார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அதர்வா மனைவி, மகனை கட்டிப்பிடித்து கதறுவார். மீள முடியாத அந்த நகரத்தில் மாட்டிக்கொள்ளும் இவர்களின் அழுகையோடு அந்த படம் முடியும். இது ஆடியன்ஸ் மனதை உருக்கும் வகையில் அமைந்தது.

Also read: வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

96: பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் மாறுபட்ட நடிப்பில் 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. பள்ளி பருவத்தில் இருந்து காதலிக்கும் இவர்கள் இடையில் பிரிந்து விடுவார்கள். பல வருடம் கழித்து விஜய் சேதுபதியை சந்திக்கும் திரிஷாவுக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

கை தொடும் தூரத்தில் இருந்த தன்னுடைய காதல் தன் முட்டாள்தனத்தினால் பிரிந்ததை நினைத்து அவர் கதறும் அந்த காட்சி மனதை பிசையும் வகையில் இருக்கும். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த நிலையும், திரிஷாவின் தடுமாற்றமும் படத்திற்கு கூடுதல் பலத்தை தந்தது.

அதிலும் இறுதி காட்சியில் விஜய் சேதுபதியை விட்டு பிரியும் த்ரிஷா அவர் தலையில் கை வைத்து கலங்கும் அந்த காட்சி பார்ப்பவர்களை கண்ணீர் விட செய்தது. இந்த ஜோடி சேர்ந்திருக்கக் கூடாதா, எதற்கு இயக்குனர் இப்படி ஒரு முடிவை கொடுத்தார் என்று ரசிகர்கள் ஆதங்கத்தோடு இப்போது கூட பேசி வருகிறார்கள். ஆனால் இப்படி ஒரு முடிவு தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

Also read: பெரிய நடிகர்களின் மார்க்கெட்டை காலி பண்ணிய 5 படங்கள்.. விஜயகாந்துக்கு கைகொடுக்காமல் போன அந்த படம்

இப்படி சோகமான முடிவோடு வந்த இந்த படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் வெளிவந்திருக்கிறது. அதில் இந்த திரைப்படங்கள் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News