ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முதல் முறையாக சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்.. வெள்ளி விழா நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமை

ராமராஜன் என்றால் இப்ப இருக்கிறவங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 80ஸ் காலகட்டத்தில் இவரின் புகழ் எல்லா பக்கமும் பரவி வந்தது. அதாவது எப்படி என்றால் ரஜினி,கமலுக்கு இணையான ஹீரோவாக இவரை சொல்வார்கள். அந்த அளவுக்கு இவருடைய பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை பார்த்திருக்கிறது.

பொதுவாகவே இவருடைய படங்கள் கிராம சார்ந்த விஷயங்களில் நடிப்பதிலும், இயக்குவதிலும் அதிக அளவில் ஈடுபாடு கொண்டவர். இவரை தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இவர் ரொம்ப வருடமாக எந்த படங்களிலும் நடிக்காமல் மற்றும் பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.

Also read: ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

ஆனால் இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படம் தான் சாமானியன் திரைப்படம். இந்த படத்தை பார்ப்பதற்காக இவருடைய பொன்னான ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இவருடைய படங்கள் எப்பொழுதுமே வெள்ளி விழா படமாக தான் அமையும்.

மேலும் இந்த படத்தில் ராமராஜன், எம்.எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் ராதாரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இது ராமராஜனின் 45 ஆவது படமாகும். இந்தப் படத்திலும் ராமராஜன் அவரின் பழைய படங்கள் போலவே இதிலும் கிராமவாசியாக நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்கப் போகிறார்.

Also read: நடிப்பே வேண்டாம் என ஒதுங்கிய மார்க்கண்டேயன்.. ராமராஜன், மோகன் போல் இல்லாமல் ஒதுங்கும் சீனியர்

அந்த வகையில் இவருடைய ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்து இருக்கிறார். இவ்வளவு வருடமாக வெள்ளி திரையில் மட்டும் முத்திரை பதித்த இவர் இப்பொழுது சின்னத்திரையில் முதன் முதலாக என்றி கொடுக்க இருக்கிறார். இதன் மூலமே இவர் மறுபடியும் அடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார் என்றே சொல்லலாம்.

அதாவது விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4ல் இந்த வாரம் லவ் டுடே ரவுண்ட். அதற்கு மக்கள் நாயகன் ராமராஜன் சிறப்பு விருந்தினராக வருகிறார். இவரை எப்பொழுது மீண்டும் பார்க்கலாம் என்று ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவருடைய வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Also read: நகைச்சுவையான பட்டப் பெயர்களைக் கொண்ட 5 ஹீரோக்கள்.. ராமராஜன் புகழை கெடுக்க நடந்த சதி

Trending News