செம்பி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய ராங்கி, டிரைவர் ஜமுனா.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் நடக்காத நிகழ்வாக நேற்று ஒரு நாளிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தி திரைப்படங்கள் வெளியானது. அந்த வகையில் கோவை சரளாவின் செம்பி, திரிஷாவின் ராங்கி, ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதிலும் கோவை சரளாவின் மாறுபட்ட நடிப்பில் உருவான செம்பி திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஏற்கனவே அந்த படத்தின் பிரீமியர் ஷோ பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரையும் ரொம்பவே கவர்ந்திருந்தது. அதனாலேயே அந்த படத்தை பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also read: காமெடி நடிகை என்ற பிம்பத்தை உடைத்த கோவை சரளா.. செம்பி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அந்த வகையில் 60 வயதான கோவை சரளாவின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தடுமாறி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ரேஸில் ராங்கி, டிரைவர் ஜமுனா திரைப்படங்களை விட செம்பி திரைப்படம் தான் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

மேலும் பட ரிலீஸுக்கு முன்பே செம்பி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் மட்டும் 25 லட்சம் வசூலித்துள்ளது. அதேபோன்று ராங்கி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் 16 லட்சம் தான் வசூலித்திருந்தது. இதிலிருந்து கோவை சரளாவின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

Also read: டிரைவர் ஜமுனாவாக மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் படத்தின் முதல் நாள் வசூலும் இப்போது முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் செம்பி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 50 லட்சம் வரை வசூலித்து இருக்கிறது. அதைத்தொடர்ந்து திரிஷாவின் ராங்கி திரைப்படம் முதல் நாளில் 36 லட்சம் கலெக்சன் பார்த்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கு அடுத்தபடியாக தான் ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா இருக்கிறது. அதன்படி அப்படம் முதல் நாளில் 21 லட்சம் வசூலித்திருக்கிறது. இப்போது விடுமுறை நாட்கள் என்பதால் வரும் நாட்களில் இந்த படங்களின் வசூல் நிலையில் மாறுதல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் செம்பி திரைப்படம் தான் தற்போது ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்திருக்கிறது.

Also read: கட்டுக்கடங்காத திரிஷாவின் ராங்கி.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்