தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களாக அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஹீரோக்கள் தங்களது கடின உழைப்பை போட்டு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அந்த வகையில் சில வருடங்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்த நடிகர்களின் தரவரிசையை தற்போது பார்க்கலாம்.
விஜய் சேதுபதி : யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அபரிவிதமான அளவிற்கு வளர்ச்சி அடைந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. நானும் ரவுடிதான், விக்ரம் வேதா, 96, மாஸ்டர், விக்ரம் என பல வெற்றி படங்களை கொடுத்து நடிகர்களின் தரவரிசையில் ஏழாவது இடத்தை விஜய் சேதுபதி பிடித்துள்ளார்.
Also Read : விஜய் சேதுபதியை நம்பாமல் கார்த்திக் செய்த வேலை.. இது எல்லாம் நல்லாவா இருக்கு விருமா!
சூர்யா : கடந்த 20 ஆண்டுகளில் கடைசி சில வருடங்கள் சூர்யாவுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமின்றி சூரரைப் போற்று படதிற்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூர்யா ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் : சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. இந்த தரவரிசை பட்டியலில் சூர்யாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார்.
தனுஷ் : தனுஷ் வடசென்னை, அசுரன் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கான ரசிகர் கூட்டத்தை அதிகப்படுத்தி உள்ளார். அதிலும் தொடர் தோல்வி கொடுத்து வந்த தனுசுக்கு திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளார்.
Also Read : வியாபாரத்தில் தனுஷ் சந்தித்த பெரிய அடி.. எல்லோரையும் ஓரங்கட்டி No.1 இடத்தை பிடித்த நடிகர்
அஜித் : அஜித் கடந்த 20 ஆண்டுகளில் மங்காத்தா, என்னை அறிந்தால், விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது. அஜித் நடிகர்களின் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
விஜய் : தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படமாவது விஜய் கொடுத்த ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூலை மற்ற படங்களால் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர்களின் தரவரிசையில் விஜய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தும் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் எந்திரன், 2.0 போன்ற மிகப்பெரிய வசூல் சாதனை அடைந்த படங்களை ரஜினி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி எப்போதும் போல இப்பொழுதும் சூப்பர் ஸ்டார் தனக்கான முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
Also Read : விரைவில் தலைவரின் 170 பட அறிவிப்பு.. பிரம்மாண்ட மேடையை தேர்வு செய்த ரஜினி