வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

என்னது மணி அண்ணனா.! பொம்பள புத்தியை காட்டி ரவீனா ஆடும் டபுள் கேம்

Biggboss 7: ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் நிச்சயம் ஒரு காதல் ஜோடி இருப்பார்கள். ஆனால் இந்த முறை வெளியிலேயே காதலர்கள் என கிசுகிசுக்கப்பட்ட மணி, ரவீனா ஜோடியாக உள்ளே வந்தனர். இதனால் நமக்கும் கன்டென்ட் கிடைக்கும் என விஜய் டிவி ஆவலுடன் எதிர்பார்த்தது.

அதற்கு ஏற்றார் போல் இந்த ஜோடியும் ஹனிமூன் வந்தது போல் எப்பவும் தனி உலகத்தில் சுற்றி வந்தனர். இது வீட்டிற்குள்ளேயே பூகம்பமாக வெடித்தாலும் இவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அதிலும் ரவீனா சதா நேரமும் மணி பின்னாலேயே சுற்றி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அது மட்டுமின்றி அவரை உரசுவது, கடிப்பது, கையை நக்குவது என குழந்தைத்தனமாக செய்கிறேன் என இவர் செய்யும் அட்ராசிட்டி கடுப்பை தான் வரவழைக்கிறது. மேலும் இந்த வாரம் அவரை பார்க்க வந்த அமெரிக்கா ஆன்ட்டி கூட மணியை கூப்பிட்டு வைத்து சரமாரியாக ரோஸ்ட் செய்தார்.

Also read: இந்த வாரம் கமல் கழுத்தை பிடித்து தள்ளப் போகும் மிக்சர் பார்ட்டி.. தடுமாறும் பிக்பாஸ் ஓட்டிங் நிலவரம்

அப்போது கூட ரவீனா பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை. இந்நிலையில் ரவீனா, மணியை அண்ணன் என்று சொன்ன பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேட்டி எடுப்பவர் இவரிடம் மணியுடன் இருக்கும் உறவை பற்றி கேட்கிறார். உடனே ரவீனா நாங்கள் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறோம்.

அவர் எனக்கு அண்ணன் என்று சொல்கிறார். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் செய்து கொண்டிருக்கும் வேலையை பார்த்தால் உலக மகா நடிப்புடா சாமி என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆக மொத்தம் மணியை வைத்து டபுள் கேம் ஆடும் ரவீனாவின் சுயரூபம் இப்போது வெளிவந்திருக்கிறது.

அமெரிக்கா ஆன்ட்டி அவ்வளவு பேசும் போது கூட இவர் அண்ணன் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. அதை தற்போது கூறிவரும் மணியின் ரசிகர்கள் கடைசியில் பொம்பள புத்திய ரவீனா காட்டிவிட்டதாக குமுறி வருகின்றனர். இனிமேலாவது மணி சூதானமாக இருந்து கொண்டால் நல்லது.

Also read: ஆண்டவரே சொன்னாலும் நாங்க இப்படித்தான்.. பிக்பாஸில் ஆட்டிடியூட் காட்டிய 5 பிரபலங்கள்

Trending News