இந்திய அணியில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் ரவிசாஸ்திரி. அவருடைய பயிற்சி காலமும் முடிந்தது, வயது வரம்பும் முடிந்தது அதனால் இவரே முன்வந்து ராஜினாமா செய்துவிட்டார்.
சாஸ்திரி பயிற்சியாளராக இருக்கும் போது இந்திய அணி பல சர்ச்சைகளில் சிக்கியது . விராத் கோலிக்கு வேண்டியவற்றை மட்டுமே செய்கிறார் எனவும், அவர் விரும்பியதை அவர் கண்முன் கொண்டுவந்து விடுகிறார் என்றும் பேச்சுகள் அடிபட்டது.
எப்பொழுதுமே கையில் சமோசா தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார் ரவிசாஸ்திரி. இப்பொழுது அதற்கும் விடை கொடுத்து விட்டு மீண்டும் தனது பழைய பணிக்கு திரும்புகிறார்.
பழைய தொழிலில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் கமெண்ட்ரி செய்வதில் வல்லவர். ரொம்ப ஸ்டைலாக இங்கிலீஷ் பேசும் திறமை கொண்டவர். இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ததால் பழையபடி தன் கமெண்ட்ரி செய்யும் தொழிலுக்கு வந்து விட்டார்.
ரவி சாஸ்திரி நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளுக்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்க இருக்கிறார்.
சாஸ்திரியின் ரசிகர்கள் அவருடைய கமெண்டரியை கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி, மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.