ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இவ்வளவு பாசம் வைத்த ஜடேஜா.. இன்றுவரை கற்றுக் கொடுத்த குருவிற்காக ஏங்கும் ஜட்டு பாய்

ஜடேஜா இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இன்றுவரை ஒரு வீரரை மறக்கமுடியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் என்றும் பெருமையாக கூறி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா சிறப்பாக தனது பங்களிப்பை அளித்தார். இப்பொழுதுதான் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆனால் ஆரம்பத்தில் அவரை வளர்த்தது என்னமோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. அவருக்கு அந்த அணியின் சீனியர் வீரரான ஷேன் வார்னே தகுந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தவர்கள் என்றே கூறலாம்.

சமீபத்தில் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் இன்றுவரை நான் மறக்க முடியாமல் ஒரு வீரருக்காக ஏங்கி வருகிறேன். அவர்தான் தனக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்த ஷேன் வார்னே என்று கூறியுள்ளார்.

அவரின் மறைவு தன்னை மிகவும் பாதிப்பதாகவும் அவருக்கு இவ்வளவு சீக்கிரம் மரணம் ஏற்பட்டதை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். சில நேரங்களில் அவர் தன்னுடன் பயணிப்பது போலவே நினைவுகள் வருகிறதாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சீனியர் வீரர் போன்று இல்லாமல், எல்லோரிடமும் சகஜமாக பேசி குறும்புத்தனம் செய்வார். ஆனால் பொழுதுபோக்கிற்காக நிறைய தீய வழிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இவ்வுலகை விட்டு சீக்கிரம் பிரிந்துவிட்டார், அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று வேண்டிக் கொண்டார் ரவீந்திர ஜடேஜா.

Trending News