Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ரீ-ரிலீஸ் டிரெண்ட்: தமிழ் சினிமாவுக்கு வரமா, சாபமா?

ரீ-ரிலீஸ் டிரெண்ட்: தமிழ் சினிமாவுக்கு வரமா, சாபமா?

கோலிவுட்டில் பழைய படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்வது தற்போது ஒரு முக்கியமான டிரெண்டாக மாறியுள்ளது.

விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பல பழைய படங்களையும் மீண்டும் தியேட்டர்களில் வெளியிடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கு 90ஸ் மற்றும் 2K கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. ஏனெனில், தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் பல திரைப்படங்கள், அவை முதன்முதலில் வெளியானபோது திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால், அந்தப் படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அதேநேரத்தில், ஏற்கெனவே வெளியான படங்களையே மீண்டும் வெளியிடுவதாலும், கதைப் பஞ்சம் நிலவுவதாலும், யூடியூப் போன்ற தளங்களில் பல பழைய படங்கள் எளிதாகக் கிடைப்பதாலும், இந்த முயற்சியை முன்னெடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.

இருப்பினும், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங் மற்றும் விளம்பரச் செலவுகள் மட்டுமே இருக்குமென்பதால் சில தயாரிப்பாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படி பல்வேறு விவாதங்கள் இருந்தாலும், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உங்களுடைய பழைய நினைவுகளையும் நாஸ்டால்ஜியாவையும் மீட்டெடுக்கும் எந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்யலாம் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்!

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.