வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்துக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.. வெளிவந்தது விட்டுக்கொடுக்காததன் ரகசியம்

இந்த முறை பொங்கலுக்கு வாரிசு மட்டும் துணிவு இரண்டு படங்களுமே வெளியாகிறது. 2 மாஸ் படங்கள் வெளியாவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக ரஜினி மற்றும் கமல் படங்கள் கூட வெளியாகி இருக்கிறது ஆனால் இந்த அளவிற்கு பிரச்சனை வந்தது கிடையாது. இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அஜித் தான் இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

Also read: பதவி, பணம் வந்தாலும் மாறாத உதயநிதி.. என்னது அஜித் இவர்கிட்ட கத்துக்கணுமா? நம்புற மாதிரி இல்ல

அஜித் மற்றும் விஜய் படங்கள் இதற்கு முன்னர் ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது அப்போது கூட இந்த அளவு சலசலப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால் இந்தப் பொங்கலுக்கு இப்படி ஒரு சலசலப்பை கூட்டி வருகின்றனர். இதற்கு காரணம் இரண்டும் ஹீரோக்களும் விடாப்படியாக இருக்கிறார்கள்.

இரு படங்கள் வெளியாவதால் வசூல் விகிதத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்று முதலில் தியேட்டர் ஓனர்கள் இதற்கு தயக்கம் காட்டினாலும் அதன்பின் இந்தப் படங்களுக்கு அட்வான்ஸ் தொகை இல்லை என்ற செய்தி கேட்டதும் அவர்களும் இதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

Also read: யாரையும் அவ்வளவு சீக்கிரமா நம்ப மாட்டேன்.. அஜித்தின் இன்றைய மாற்றத்திற்கு இதுதான் காரணம்

இப்பொழுது அஜித் தான் விஜய்க்கு போட்டியாக இந்த பொங்கலுக்கு படத்தை வெளியீடுஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். இதற்கும் பல காரணங்கள் கூறப்படுகிறது. அஜித் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளவும், பொங்கல் என்றால் அந்த மாஸ் ஓபனிங் இருக்கும் என்பதாலும் படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி வருகிறாராம் .

இப்படி இரு படங்கள் ரிலீஸ் ஆவதால் நிச்சயமாக வசூல் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏதாவது ஒரு படம் ரசிகர்களை கவர்ந்து விட்டால் நிச்சயமாக மற்றொருவரின் படம் நஷ்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Also read: நம்பிக்கை துரோகம், 15 வருட வாழ்க்கையை இழந்த அஜித் பட நடிகை.. ரியல் லேடி சூப்பர் ஸ்டார் நீங்க தான்

Trending News