வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமலை அடக்கி ஒடுக்கிய நடிகர்கள்.. அவர்களை இந்த படத்தில் நடித்துதான் மிரட்டினார்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களின் போராட்டத்தை பற்றிய கதைக்களத்துடன் வெளியான இந்தத் திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, நாசர், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்றது. மேலும் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு அவரின் சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

மும்பையில் ஒரு தமிழராக பிழைப்பு தேடி வந்த வரதராஜ முதலியார் பிற்காலத்தில் மும்பை பாதாள உலக டானாக உருவெடுத்தார். மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தென்னிந்தியர்களுக்கு அவர் பல உதவிகள் செய்துள்ளார். இன்றும் அவருடைய பெயர் மும்பையில் வர்தா பாய் என்று பேசப்பட்டு வருகிறது.

அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் கமல்ஹாசன் நடித்து இருந்தார். அவர் இந்த கேரக்டர் செய்வதற்கு ஒரு பின்னணி காரணமும் இருக்கிறது. அதாவது 80 காலகட்டத்தில் கமல்ஹாசன் ஹிந்தியில் நிறைய படங்களில் நடித்து வந்தார். ஹிந்தியில் வெளிவந்த ஏக் தூஜே கே லியே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதற்குப்பின் அமிதாப்பச்சனுடன் கமல் நடித்தார், அதில் அமிதாப்பச்சனின் நடிப்பை தாண்டி கமலின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. அதனால் எங்கே அவர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்து விடுவாரோ என்ற பதட்டத்தில் அங்கு இருக்கும் சிலர் அவருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்து உள்ளனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் வரதராஜ முதலியார் தான் கமலுக்கு ஆதரவாக இருந்து அவரை அந்த பிரச்சனையில் இருந்து விடுவித்தார் என்ற ஒரு தகவலும் உண்டு. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கிய கமல்ஹாசன், வரதராஜ முதலியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நாயகன் படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இறந்த பின்னர் கமல் மும்பைக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. நாயகன் படம் மட்டுமல்லாமல் அதற்கு பிறகு பல திரைப்படங்கள் வரதராஜ முதலியார் பற்றிய கதைக்களத்துடன் வெளிவந்துள்ளது. அதில் ஒன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படம்.

Trending News