வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிம்பு உச்சம் தொடாததற்கு பின்னடைவான விஷயங்கள்.. கை பிள்ளையாக மாறிய லிட்டில் சூப்பர் ஸ்டார்

1984 ஆம் ஆண்டு “உறவை காத்த கிளி” படத்தில் அறிமுகமானார் சிம்பு. அப்பொழுது அவருக்கு வயது 2. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக 11 படங்கள் பண்ணினார். கெஸ்ட் அப்பியரன்ஸ் என்ற கணக்கில் மூன்று படங்கள் பண்ணினார் அதன் பின்2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது சிம்புவிற்கு வயது 41. கமலுக்கு பின் சினிமாவில் சகலகலா வல்லவனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். நடிப்பு, நடனம், பாடல் பாடுவது, இசை, இயக்கம் என எல்லாவற்றிலும் தன்னை பலப்படுத்திக் கொண்ட சிம்பு சினிமாவில் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

சிம்புவிற்கு கை கூடி வந்த படங்களெல்லாம் டிராப் ஆகி வருகிறது. கடைசியாக சிம்புவின் நடிப்பில் வெளிவந்த படம் பத்து தல. இப்பொழுது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். அதன் பிறகு எந்த படத்தில் இதுவரை கமிட்டாக இல்லை.

தேசிங்கு பெரியசாமி, மலையாள இயக்குனர் ஆண்டனி ஜோசப் போன்றவர்களுடன் கமிட்டான படம் இப்பொழுது வரை நிலுவையில் தான் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சிம்பு இன்று வரை வளர முடியாமல் போனதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் என்கின்றனர்.

இப்பொழுது வரை சிம்பு, டி ராஜேந்திரன் கைப்புள்ளையாகத்தான் இருக்கிறாராம். இவருக்கு என்று தனி மேனேஜர் இருந்தாலும். படங்களை கமிட் செய்வது, சிம்புவின் சம்பளத்தை பேசுவது எல்லாமே அவரது தந்தை டி ராஜேந்தர் தானாம் .படம் ஆரம்பிக்கும் போது ஒரு சம்பளம் அதன் பிறகு அக்ரீமெண்ட் போடும்போது பல மடங்கு உயர்த்தப்பட்ட சம்பளம் என கேட்பதால் தான் இன்று வரை சிம்புவால் வளர முடியாமல் போனதாம்.

Trending News