புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெரிய முதலைகளை வளைத்துப் போடும் சிவகார்த்திகேயன்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா.?

விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் ஒரு ரவுண்ட் வந்த சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு சினிமாவிலும் தன் முத்திரையைப் பதிக்க தயாராகிவிட்டார்.

இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.

அனுதீப் இயக்கும் இந்த திரைப்படத்தை ஆந்திராவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏசியன் சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஆட்கள் ஆந்திராவில் பெரிய அந்தஸ்து கொண்டவர்கள். தற்போது இவர்கள் கையில் கிட்டத்தட்ட 11 படங்கள் இருக்கிறது.

மேலும் இவர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு எல்லாம் பைனான்ஸ் பண்ணியவர்கள். இது தவிர இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆந்திர பிரபலம் ராம நாயுடுவின் வாரிசுகள் இருக்கின்றனர். அதனால்தான் சிவகார்த்திகேயன் செம பிளான் பண்ணி இந்த படத்தை செலக்ட் பண்ணி இருக்கிறார்.

இதற்கு வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தின் பைனான்சியரால் அதிக கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறார். இதன் காரணமாகத்தான் அவர் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் நிறைய பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் அந்தப் படங்களை ஏற்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களை பற்றி நன்கு விசாரித்து விட்டு பெரிய ஆட்களாக இருந்தால் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு இருக்கும் கடன் சுமை முழுவதுமாக தீரும் என்று மாஸ்டர் பிளான் போட்டு உள்ளார்.

Trending News