புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பழசை மனதுக்குள் வைத்து பலி வாங்கிய பா ரஞ்சித்.. விக்ரம் விபத்துக்கு இதுதான் காரணம்

இயக்குனர் பா ரஞ்சித் அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வருகிறார். அதுவும் கதாநாயகர்களை தனது படம் மூலம் மெருகேற்றி விடுவார். தற்போது சியான் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் 15 நாள் சிகிச்சை பெற்றார் என்ற செய்தி வெளியானது. பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் ஹீரோக்களுக்கு எப்பொழுதுமே பாதுகாப்பு அதிகமாகத்தான் இருக்கும். விக்ரமின் விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

Also Read : இந்து கடவுளை அவமதித்த மலக்குழி மரணம்.. கொந்தளித்து போய் அறிக்கை விட்ட பா ரஞ்சித்

அதுமட்டுமின்றி உலக நாயகன் கமலஹாசனை போல சினிமாவில் எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும் அவரே மெனக்கெட்டு செய்யக்கூடியவர். அவ்வாறு ஏதாவது கஷ்டமான காட்சியில் நடிக்கும் போது இவ்வாறு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கணித்தனர். ஆனால் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் தான் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதாவது தங்கலான் படப்பிடிப்பில் அடிக்கடி சந்தேகம் கேட்டு பா ரஞ்சித்தை விக்ரம் தொந்தரவு செய்துள்ளாராம். இதனால் எரிச்சல் அடைந்த அவர் உதவி இயக்குனரை கூப்பிட்டு எல்லா விஷயத்தையும் விக்ரமுக்கு விளக்கமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் கடுப்பான விக்ரம் படப்பிடிப்புக்கு வராமல் மேக்கப் ரூமுக்கு சென்று விட்டாராம்.

Also Read : சாமுராய், படத்துக்கு பின் விக்ரமுக்கு ஏற்பட்ட பிரச்சனை .. கேரியர் பெஸ்ட் க்கு ஆசைப்பட்டு மண்ணாய் போன தங்கலான்

இதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டு பா ரஞ்சித் விக்ரமை வச்சி செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை பொறுத்தவரையில் ஸ்டண்ட் மாஸ்டருக்கு தான் அடிப்படும். சில ஸ்டண்ட் மாஸ்டர்கள் சண்டை காட்சிகளின் போது உயிரிழந்ததும் உண்டு. மேலும் பெரிய ஹீரோக்களுக்கு அடிப்பட்டு கேள்விப்பட்டதே கிடையாது.

பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் ஹீரோக்களுக்கு பதிலாக டூப் போடுவார்கள். இப்படி இருக்கையில் பழசை மனசுக்குள் வைத்துக் கொண்டு பா ரஞ்சித் வேண்டுமென்று பைட் மாஸ்டரை உசுப்பேற்றி விட்டு விக்ரமை அடிக்க வைத்துள்ளார். இதனால் தான் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : வெளிவந்தது தங்கலான் படத்தின் உண்மை கதை.. பல ரகசியம் அடங்கிய டைட்டிலை வைத்த பா ரஞ்சித்

Trending News