திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

Sai Pallavi who rejected Ajith and Vijay’s film: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கக்கூடிய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் படங்களின் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகள் எல்லாம் போட்டி போட்டு வரிசை கட்டி காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் சாய் பல்லவி அதை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

அதற்கான காரணத்தையும் தற்போது கூறி இருக்கிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான லியோ போன்ற இரண்டு படங்களிலும் சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிக்க இருந்தது. துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் முதலில் சாய்பல்லவி தான் தேர்வானார்.

ஆனால் அந்த படத்தின் கதையைக் கேட்டபின், இதில் ஹீரோயின் கதாபாத்திரம் வலுவாக பேசப்படவில்லை என்று ரிஜெக்ட் செய்துவிட்டாராம். இருப்பினும் இந்த வாய்ப்பை மஞ்சு வாரியர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். துணிவு படத்தில் அஜித்துடன் ஆக்சன் காட்சிகளில் மஞ்சு வாரியர் மிரட்டி விட்டிருந்தார். இதில் சாய்பல்லவி நடித்திருந்தால் நிச்சயம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

Also Read: சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்

விஜய், அஜித் படங்களை வேண்டாம் என காரணம் சொன்ன சாய் பல்லவி

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களில் தான் நடிப்பேன் என்று துணிவு படத்தை தூக்கி எறிந்து விட்டார். அது மட்டுமல்ல லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் த்ரிஷா கேரக்டரில் சாய் பல்லவி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் சாய் பல்லவிக்கு லியோ படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இல்லை என்று வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனால் இந்த கேப்பில் த்ரிஷா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் உடன் ஜோடி சேர்ந்து ஸ்கோர் செய்து விட்டார்.

இந்த ரெண்டு படங்களிலும் சாய் பல்லவி தாராளமாக நடித்திருக்கலாம், தேவை இல்லாமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் சாய் பல்லவியை பொருத்தவரை, படத்தின் கதைக்காகவே நடிப்பாரே தவிர அதில் நடிக்கும் நடிகர்களுக்காக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறார்.

Also Read: ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு.. பச்சைக்கொடி காட்டிய அஜித் பொண்ணு

Trending News