செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

சமீபத்தில் பெண்களை மையப்படுத்தி ஓடிய 5 படங்கள்.. அடித்து துவம்சம் செய்த கட்டா குஸ்தி

தமிழ்  சினிமாவில் வெளியாகும் தரமாக படங்களை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் பெண்களைப் போற்றும் 5 படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் கட்டா குஸ்தி திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி அடித்து தும்சம் செய்திருப்பார்.

ராங்கி: பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து திரிஷாவின் ராங்கி திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியானது. குந்தவையாக ரசிகர்களை கவர்ந்த திரிஷா இந்த படத்தில் வேறு விதமான பரிணாமத்தில் நடித்துள்ளார். எம் சரவணன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் திரிஷா நடிப்பில் ராங்கி படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைய அம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் ராங்கி படத்தில் திரிஷா ஜானலிஸ்ட் ஆக நடித்துள்ளார். அநியாயத்திற்கு குரல் கொடுக்கும் ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ராங்கி தனத்துடன் திரிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் வலுவாக பேசப்பட்டதால் வித்யாசமான திரிஷாவை பார்க்க முடிந்தது.

Also Read: திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

கட்டா குஸ்தி: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. அதிலும் இந்த படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கட்டாக் குஸ்தியில் மிரள விட்டிருக்கிறார்.

ஏனென்றால் இதில் விஷ்ணு விஷால் சாதுவாக நீண்ட கூந்தலுடன் இருக்கக்கூடிய மனைவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதற்கு மாறாக ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தியில் பயில்வான் ஆக சண்டை போட்டு தும்சம் செய்கிறார். இதனால் எதிர்பார்ப்புகள் எல்லாம் வீணாய் போனதால் விஷ்ணு  விஷால், குஸ்தியில் அடித்து துவைக்கும் ஐஸ்வர்யா லட்சுமியை எப்படி சமாளிக்கிறார் என்பதை இந்த படத்தின் சுவாரசியம் 

செம்பி: பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் செம்பி.  இதில் கோவை சரளா, 10 வயதான பேத்திக்கு இழைக்கப்படும் அநீதிக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முயற்சி செய்யும் போராளியாக 80 வயது கிழவி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இவ்வளவு நாள் காமெடி நடிகையாகவே கோவை சரளாவை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் இவருடைய நடிப்பு மெய் சிலர் பூட்டும் வகையில் இருந்ததாகவும், பல இடங்களில் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

Also Read: செம்பி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய ராங்கி, டிரைவர் ஜமுனா.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

கனெக்ட் :  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வினய், சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படமும் கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாகப் பேசக்கூடிய படமாக வெளிவந்தது. இதில்  கணவரை இழந்த கதாநாயகி நயன்தாரா கொரோனா காலகட்டத்தில் தீய சக்தியால் ஆட்கொள்ளப்பட்ட தன்னுடைய மகளை பல போராட்டங்களுக்குப் பிறகு எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை திகிலூட்டும் வகையில்  காட்டியிருப்பார்கள்.

டிரைவர் ஜமுனா: இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தனிக் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பெண்களை போற்றக்கூடிய வகையில், படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  சவால் நிறைந்த கார் டிரைவர் ஆக  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெண் கார் டிரைவர் ஆக இருக்கும்போது அவர் சமாளிக்கக்கூடிய பிரச்சனைகளையும் அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தத்ரூமமான நடிப்பில் வெளிகாட்டி அசத்தியுள்ளார்.

Also Read: சிவப்பு உடையில் செம ஸ்டைலிஷ் ஆன ராங்கி.. 39 வயதிலும் ஜொள்ளு விட்ட படக்குழு

இவ்வாறு இந்த 5 படங்களும் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களாகும். அதிலும் பூங்குழலியாக ரசிகர்கள் பார்த்த ஐஸ்வர்யா லட்சுமியை கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி போட்டு அடித்து துவம்சம் செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  

Trending News