Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

இரண்டு நடிகர்கள் நிராகரித்த கதை..சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!

இரண்டு நடிகர்கள் நிராகரித்த கதை..சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடிகர்களின் திரைப்பயணத்தையே மாற்றியமைக்கும்.அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.குறிப்பாக சிவகார்த்திகேயன்,சூரி கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகளும், சத்யராஜின் கேரக்டரும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில்,இந்தப் படத்தின் கதையை முதலில் சிவகார்த்திகேயனிடம் பொன்ராம் கொண்டு செல்லவில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ள தகவலின்படி,‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கதையை முதலில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரிடம் பொன்ராம் கூறியுள்ளார்.ஆனால்,சில காரணங்களால் அவர்கள் இருவரும் அந்தக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டாமல் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து,அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயனிடம் இந்தக் கதை சென்றுள்ளது.கதையை ஏற்றுக்கொண்டு அவர் நடித்த நிலையில்,பொன்ராமின் ஸ்கிரீன் ப்ளே,கிராமத்து பின்னணி,காமெடி மற்றும் சூரியுடனான கூட்டணி என அனைத்தும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தன.

செப்டம்பர் 6,2013ஆம் தேதி வெளியான இப்படத்தில் ஸ்ரீதிவ்யா,சத்யராஜ்,சூரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் களில் நடித்திருந்தனர்.டி. இமான் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.குறிப்பாக ‘ஊதா கலரு ரிப்பன்’பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் இந்தப் படத்திற்கு முக்கியமான இடமுண்டு.ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதை,பின்னர் அவருடைய திரைப்பயணத்தில் மறக்க முடியாத வெற்றிப் படமாக மாறியது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.