கமலுக்கும் விண்வெளிக்கும் என்ன சம்பந்தம்.. கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பாவா, தக் லைஃப் ப்ளூ சட்டை விமர்சனம்

Thug Life-Blue Sattai Maran Review: தக் லைஃப் படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலருக்கு படம் சூர மொக்கை. சிலருக்கு ஓகே ரகம். சிலருக்கு சூப்பர் என்ற ரீதியில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதில் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போன ஆடியன்ஸ் தான் அதிகம். மற்றொரு பக்கம் இதெல்லாம் பார்த்துட்டு போய் படத்தை பார்க்கணுமா இல்ல ஓடிடியில் பார்க்கலாமா என்ற யோசனையில் இருக்கின்றனர்.

அதில் தற்போது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதில் படத்தின் பெயரை பார்த்துட்டு இது தக்கர்கள் சம்பந்தப்பட்ட படம் நினைச்சோம். ஆனால் டிரைலர் வந்தபோது வழக்கமான கேங்ஸ்டர் என தெரிந்து விட்டது.

தக் லைஃப் ப்ளூ சட்டை விமர்சனம்

ஆனா படத்துல அதுக்கான எந்த அறிகுறியும் இல்லை. கேங்ஸ்டர் கூட்டம் என்ன தான் தொழில் செய்றாங்கன்னு தெரியல. அப்புறம் சோத்துக்கு என்ன பண்ணுவாங்க.

இதுல கமல் கேங்ஸ்டர் என்பதை மறந்துவிட்டு திரிசாவுடன் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயிலிலிருந்து வந்தால் நாளு நாள் த்ரிஷா வீட்டில் தங்கிவிட்டு தான் அபிராமியை பார்க்கப் போகிறார்.

அங்க போயும் ரொமான்ஸ் தான். அப்புறம் என்ன இது கேங்ஸ்டர் படம் என மரண கலாய் கலாய்த்துள்ளார். அதேபோல் கமலுக்கும் விண்வெளிக்கும் என்ன சம்பந்தம். இவர் என்ன கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பாவா.

லாஜிக்கே இல்லாம படம் எடுத்து வச்சிருக்காங்க. இதில் சிம்புவின் நிலைமை தான் பாவம். ரெண்டு ஹீரோயினும் கமலுக்கு தான். தயாரிப்பாளருன்னா ரெண்டு ஹீரோயினும் உங்களுக்கு தானா.

இந்த விஷயத்துல நம்ம சிம்பு பக்கம் தான் இருக்கணும். ஏன்னா நியாயம் அவர் பக்கம் தான் இருக்கு என படத்தை கேப் விடாமல் கலாய்த்து தள்ளி உள்ளார்.

இவ்வளவையும் மீறி படம் பார்க்க போனா உங்களுக்கு ஜிங்குச்சா தான் என தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார். இப்படியாக ஒட்டுமொத்த சோலியையும் அவர் முடித்து விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →