எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்தியின் சர்தார்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதில் கார்த்தியுடன் இணைந்து ராசி கண்ணா, லைலா ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

sardar-karthi
sardar-karthi

அதில் இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பராக இருப்பதாகவும், இடைவேளை காட்சி புத்திசாலித்தனமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் கார்த்தி இப்படத்தில் பலவிதமான கெட்டப்புகள் போட்டு நடித்திருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

sardar-karthi
sardar-karthi

அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக கார்த்தி தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த படம் தற்போது ரசிகர்களை மட்டுமல்ல திரை பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

அதிலும் ஒரு ரசிகர் இந்த படத்தின் இடைவேளை காட்சியை பற்றி நாசுக்காக கூறி இருக்கிறார். அதாவது இடைவேளை காட்சியின் போது தண்ணீர் பாட்டில் வாங்க வெளியில் செல்லும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துப் பாருங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

sardar-karthi
sardar-karthi

ஏனென்றால் அது தான் சமுதாயத்திற்கு மிக முக்கியமான கருத்தை சொல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது தான் படத்தின் கதை கரு என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தம் கார்த்தியின் இந்த சர்தார் தீபாவளிக்கான சரவெடியாக இருக்கிறது.

sardar-karthi
sardar-karthi