Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ராகவாலாரன்ஸின் நடிப்பில் அதிரடியாக உருவாகும் சந்திரமுகி 2.. வெளியான புதிய அப்டேட்

சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்தது. இயக்குனர் பி.வாசு […]

சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்தது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தின் பாகம்-2 இயக்கயிருப்பதாக பி.வாசு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்காக நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் அனுஷ்கா,வடிவேலு உள்ளிட்டோர் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்திரமுகி திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் பாகம் இரண்டை தயாரிக்க இருந்த நிலையில், தற்போது லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சந்திரமுகி பட டைட்டில் உரிமையை சிவாஜி ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனர் ராம்குமாரிடம் இருந்து 1 கோடி ருபாய் கொடுத்து லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்த டான் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், கூடிய விரைவில் ராகவா லாரன்சின் நடிப்பில் சந்திரமுகி2 திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராகவா லாரன்ஸ் கையில் ருத்ரன், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி வந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க ஆயத்தமாக வருகிறார்.

ரஜினிகாந்தின் சிஷியானான ராகவாலாரன்ஸ், சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை அனுஷ்கா, பாகுபலி திரைப்படத்திற்கு பின் தமிழில் சந்திரமுகி 2 நடிக்க ஆவலுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.