ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் இவர்கள் இருவரது கேப்டன்ஷிப்பிலும் ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத வல்லமையாக விளங்கி வந்தது. எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்தது.
தற்போதைய ஆஸ்திரேலியா அணி பழைய அணி போல் இல்லை என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலைமையில் விளையாடிய காலத்தில் எந்த தொடராக இருந்தாலும் அனைத்து போட்டியிலும் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறும்.
1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகக் கோப்பை தொடரிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இப்படி எல்லா தொடர்களிலும் ஒரு வல்லமை மிக்க அணியாக விளங்கி வந்தார்கள்
இதில் இரண்டு முறை 1987 மற்றும்1999 ஆம் ஆண்டு ஸ்டீவ் வாக் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு தொடர்ந்து ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றுள்ளது.
அதுதான் ஆஸ்திரேலியா அணியின் பொற்காலம் என ஆடம் கில் கிரிஸ்ட் தெரிவிக்கிறார். இந்திய அணி தான் எப்பொழுதும் ஆஸ்திரேலியா அணிக்கு நிகர் அணியாக விளங்கி வருவதாகவும் அவர் கருத்தை நேர்மையாக சொல்லி இருக்கிறார். அவர்களால் மட்டுமே ஆஸ்திரேலியாவின் யூகங்களை தகர்த்து ஏறிய முடியும் என ஜென்டில்மேன் போல் வெளிப்படையாக கூறியுள்ளார். எப்படியும் இவர் கருத்துக்கு எதிர் கருத்துக்கள் ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து வரும்.