வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மன உளைச்சலை ஏற்படுத்தும் பிக்பாஸ் 7.. கமலுக்கு எதிராக பாயும் தகவல் அறியும் உரிமை சட்டம்

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த சில வாரங்களாகவே கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் சேனல் தரப்பு பார்வையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் மன உளைச்சலை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் நிகழ்ச்சியின் போக்கு மட்டும் மாறவே இல்லை. அதனாலேயே இப்போது தென்னரசு என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியால் படாத பாடுபட்டு கொண்டு இருக்கும் கமலுக்கு இதுவும் ஒரு சிக்கலாகி இருக்கிறது.

அதன்படி அந்த மனுவில் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்கள் போட்டியாளர்களா அல்லது நடிகர்களா? நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட்டா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது போட்டி என்றால் அரசு அனுமதி பெற்றதா?.

Also read: மணியை பிரேக் அப் செய்ய இதுதான் காரணம்.. ரவீனாவால், காதலுக்கு குட்பை சொன்ன நிஜ காதலி

மன உளைச்சலை ஏற்படுத்தும் பிக்பாஸ்

இந்த போட்டி மன உளைச்சலை தருகிறது. தனிநபரை இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு உட்படுத்த சட்டத்தில் அனுமதி இருக்கிறதா? உளவியல் ரீதியான கோளாறுகள் வந்தால் என்ன செய்வது? நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உடுத்தும் உடை அவர்களின் விருப்பமா? அல்லது நிகழ்ச்சி தரப்பிலிருந்து வடிவமைக்கப்பட்டதா?.

அதே போன்று போட்டியாளர்களுக்கு மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவ குழு இருக்கிறதா? வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு ஆண்களால் வேறுவித தொந்தரவுகள் ஏற்படுகிறதா? அப்படி இல்லை என்றால் அதை எவ்வாறு உறுதிப்படுத்தி உள்ளீர்கள்? என மக்களின் சார்பாக பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இல்லத்தரசிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், குறிப்பாக இளம் பெண்கள் இதை நிஜ வாழ்க்கையிலும் ஒப்பிட்டு கடைபிடிக்க வாய்ப்புண்டு. அப்படி என்றால் இது நிஜ வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பொது மனித நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மற்றொரு பிரச்சினையாக மாறி உள்ளது.

Also read: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்.. அனன்யா விஷயத்தில் பிக் பாஸ் செய்தது சரியா?

Trending News